அமெரிக்க காங்கிரஸின் குடியரசுக் கட்சி உறுப்பினர் Marjorie Taylor Greene. இவர் சமூக வலைத்தளமான Telegram இல் கருத்தொன்றை இட்டார்.
"ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவின் எதிரி. அதனால் உண்மைகளை கையாள முடியாது.உண்மைகள் அதிகமாக பரவுவதை நிறுத்த முடியாது . கமியுனிஸ ஜனநாயக வாதிகளால் உண்மைகளை நிறுத்த முடியாது என்று தன்னுடைய கருத்தை இட்டார்".
இவருடைய இந்தக் கருத்தை அடுத்து இவரது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை குறித்த நிறுவனம் தடை செய்துள்ளது. எனினும் இவருடைய உத்தியோகபூர்வ Twitter கணக்கு இயங்குகிறது.
கடந்த ஜூன் மாதத்தில் கொவிட் 19 இற்கான முகக் கவசம் மற்றும் தடுப்பூசியை 6 மில்லியன் யூதர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கருத்துக்களை வெளியிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
அமெரிக்கா