கரீபியன் நாடான பார்படோஸ் குடியரசாகியது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பார்படோஸின் அரச தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர் பார்படோஸ் குடியரசாகியது. அதன் முதலாவது ஜனாதிபதியாக சன்ட்ரா மேசன் பதவியேற்றார்.
ஆங்சாங் சூக்கியிற்கு சிறைத்தண்டணை வழங்கப்பட்டது. தேர்தல் மோசடி, கொரோனா விதிகளை மீறியமை தொடர்பில் இந்த தண்டணை வழங்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் இவர் பர்மாவில் நடைபெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக 11 வழக்குத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முதலாவது குற்றச்சாட்டுக்கே இந்த தண்டணை வழங்கப்பட்டது.
2022 சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர அடிப்படையில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, லித்துவேனியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்தன. எனினும் இந்த நாடுகளின் போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயானது 100% தாள்களைப் பயன்படுத்தாத அரசாக அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் இளவரசரால் இவ்விடயம் அறிவிக்கப்பட்டது. டுபாயின் அரச சேவைகள் 'Dubai Now' செயலியின் மூலம் மேற்கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிலியின் இளம் ஜனாதிபதியாக 35 வயதான கெப்ரியல் போரிக் தெரிவு செய்யப்பட்டார். இவர் முன்னாள் மாணவர் போராளியாவார்.நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இவர் ஐம்பதிற்கு மேற்பட்ட சதவீத வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சோமாளியாவின் பிரதமர் குசைன் ரொப்லே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த பதவி நீக்கம் இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து பிரதமருக்கு ஆதரவான படையினர் சோமாளியாவின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நிலை கொண்டதோடு ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.