பிறந்த நாளைக் கொண்டாடினார் 119 வயது மூதாட்டி

 


உலகின் வயதான பெண்மணி Kane Tanaka. தற்போது அவர் தன்னுடைய 119 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். இவருடைய படத்தை இவருடைய பேத்தி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு உலகப் போர்கள் , ஸ்பானிஷ் ப்ளு போன்ற நிகழ்வுகள் நடைபெற்ற காலப்பகுதியில் இவர் வாழ்ந்துள்ளார். அத்துடன் 49 கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் இவருடைய காலப்பகுதியில் நடைபெற்றுள்ளன. உலகில் உயிர்வாழும் அதிக வயதுடைய பெண்ணாக 2019 இல் கின்னஸ் புத்தகம் இவரை அங்கீகரித்தது.

இவர் 1903 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



இவருடைய பெயரையும் வயதையும் அச்சடித்த கொகோ கோலா குளிர் பான போத்தல்களை கொகோ கோலா நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன. 



கருத்துரையிடுக

புதியது பழையவை