2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா தன்னுடைய ஆட்டத்தைக் காட்டியது. இவற்றுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் பறவைக்காய்ச்சல் உலகில் பரவலாம் என்று அறியக் கிடைக்கின்றது. மனிதர்களைத் தாக்கக் கூடிய பறவைக் காய்ச்சல் பிரிவானது உலகை அச்சுறுத்தக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. H5N1 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 5400 கொக்குகள் இஸ்ரேலில் இறந்துள்ளன. இந்த வைரஸிற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பிரிவானது வட இஸ்ரேலில் கோழிகளைத் தாக்கிய வைரஸை ஒத்ததாகும். நோயுற்ற நிலையில் காணப்படும் பறவைகள் அல்லது அப்படியான பறவைகளிலிருந்து விழுபவற்றை தொடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
அனர்த்தங்கள்