உலகின் உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த 24 வயதான Rumeysa Gelgi அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவருடைய உயரம் 2 மீற்றர் 15 சென்ரிமீற்றர்களாகும். தன்னுடைய 18 வயதிலும் உயரமான பதின்மபருவ பெண்ணாக இவர் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பிறக்கும் போதே Weaver Syndrome எனப்படும் நோயுடன் பிறந்ததால் இந்த அதீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் இவர் சக்கர நாற்காலி மற்றும் கைப்பிடியுடனேயே எழுந்து நிற்கின்றார்.
Source : Reuters
Tags:
துருக்கி