உலக நிகழ்வுகள் செப்டம்பர் 2021

வடகொரியா மீண்டும் தனது அணு சோதனையை ஆரம்பித்ததாக செய்தி வெளியாகியது. 

கினியாவில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு  ஜனாதிபதி Alpha Condé இராணுவக் காவலில் வைக்கப்பட்டார். 

க்ரிப்டோ கரன்சியுடன் தொடர்பான நடவடிக்கைகளை சீனா தடை செய்தது. 

சுவிட்ஸர்லாந்தில் தன்னின திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

ஜப்பானின் பிரதமர் யொஷிஹிடா அடுத்த முறை தேர்தலில் இறங்குவதில்லை என அறிவித்தார். ஜப்பானின் பிரதமர் ஷின்சு அபே தனது பதவியை 2020 இல் இராஜினாமா செய்த பின்னர் யொஷிஹிடா பிரதமராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது. 

இடா சூறாவளி அமெரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

சவுதி அரேபியாவில் இராணுவப் பயிற்சியைப் முடித்த முதலாவது பெண்கள் குழுவொன்று வெளியேறியது. 

தனியே சிவிலியன்களைக் கொண்ட Inspiration எனப்படும் விண்கலம் Space X நிறுவனத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இதில் பயணம் செய்தவர்கள் 3 நாட்கள் விண்வெளியில் தங்கி பூமி திரும்பினர். 

 G-20 மாநாடு 2023 இல் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

மொரோக்கோவின் பிரதமராக Aziz Akhannouch அந்நாட்டு மன்னரால் நியமிக்கப்பட்டார். மொரோக்கோவில் செப்டம்பர் 08 இல் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க பகிரங்க ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸில் ஜெக்கோவிச்சை தோற்கடித்து Daniil Medvedev  வெற்றி பெற்றார். 

கருத்துரையிடுக

புதியது பழையவை