பேஸ்புக் அறிமுகப்படுத்தும் Smart Glass


பேஸ்புக் நிறுவனம் EssilorLuxottica நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள தனது Smart Glass ஐ இன்று அறிமுகம் செய்தது. 

இந்தக் கண்ணாடி பல சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படுகிறது. படம் பிடிக்கவும் காணொளிகளைப் பதிவு செய்யவும் முடியும். அழைப்புக்களை மேற்கொள்ளவும் பதிலளிக்கவும் இசைகளைக் கேட்கவும் முடியும். அத்தோடு சத்தத்தின் அளவை கூட்டிக் குறைக்கவும் வசதிகள் காணப்படுகின்றன.


இந்தக் கண்ணாடியின் ஒரு ஓரத்தில் LED  மின்குமிழ் காணப்படும். படம் பிடிக்கும் அல்லது காணொளியைப் பதிவு செய்யும் ஒவ்வொரு முறையும் இந்த மின்குமிழ் ஒளிரும். இதன் மூலமாக மற்றவர்கள் இதனை அறிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. 


இந்த கண்ணாடியில் காணப்படுகின்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் அல்லது குரல் வழி கட்டளை மூலம் படம் பிடிக்க அல்லது காணொளியைப் பதிவு செய்ய முடியும்.


இதனுடைய ஆரம்ப விலையாக 299 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.  



Reuter

USA Today

Pics : CNBC


கருத்துரையிடுக

புதியது பழையவை