![]() |
காபுலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் |
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காபுல் பிரதேசத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. சம உரிமை மற்றும் அரசியலில் முழுமையாக ஈடுபடுதல் தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தளவு பெண்களே கலந்து கொண்டனர்.
நேற்றும் இதே போன்ற ஆர்ப்பாட்டமொன்று ஹேரத் பிரதேசத்தில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டது. " பெண்களின் ஆதரவில்லாமல் எந்தவொரு அரசாங்கமும் நீடிக்க முடியாது. எங்களின் கோரிக்கை ; கல்விக்கான உரிமை மற்றும் அனைத்துப் பிரதேசங்களிலும் வேலை செய்வதற்கான உரிமை" என்ற வாசகம் அடங்கிய சுலோகத்தையும் இவர்கள் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஏந்தியிருந்தனர்.
Source : CNN
![]() |
ஹேரத் பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் |
Tags:
ஆப்கானிஸ்தான்