வடகொரியா தயாரித்த PCR உபகரணம்

 வடகொரியாவானது தனது சொந்த PCR உபகரணத்தை தயாரித்துள்ளதாக அதன் அரச ஊடகம் அறிவித்துள்ளது. வடகொரியாவின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியாலளர்களும் இணைந்து சர்வதேச தரத்திற்கமைய இந்த உபகரணத்தை உருவாக்கியுள்ளதாக வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான Rodong Sinmun தெரிவித்துள்ளது. 


வடகொரியாவில் இதுவரை எந்த கொவிட் தொற்றும் இடம்பெறாத நிலையிலும் அது தனது எல்லைகளை மூடியுள்ளதுடன் பயணத் தடைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டெல்டா, லம்டா போன்ற வைரஸ்களுக்கு எதிரான யுத்தத்தில் தாம் காலடி எடுத்து வைத்துள்ளதாக கொரியாவின் அரச செய்தி முகவரகம் (KCNA) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source : EuroNews

Pic: Republicworld.com

கருத்துரையிடுக

புதியது பழையவை