Associated Press செய்திச் சேவையின் தலைவராகவும் CEO ஆகவும் இலங்கை வம்சாவளி பிரித்தானிய பிரஜையான டெய்சி வீரசிங்கம் (Daisy Weerasingham) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவரான Gary Pruitt அடுத்த வருட ஆரம்பத்தில் ஓய்வு பெற உள்ளமையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2004 இல் விற்பனை இயக்குனராக பணியில் சேர்ந்த டெய்சி வீரசிங்கம் Associated Press இல் பல பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
175 வருட கால AP செய்தி நிறுவனத்தின் வரலாற்றில் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருந்து ஒருவர் அந்நிறுவனத்தின் தலைவராக வருவது இதுவே முதல் முறையாகும்.
Source : AP News
Tags:
இலங்கை