ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ் இயக்க கிளையின் திட்டமிடலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை காபுல் விமான நிலையத்தில் ஐ.எஸ் இயக்கத்தினால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.


இந்த தாக்குதலுடன் சம்மந்தப்படுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த ட்ரோன் தாக்குதல் மெற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த ட்ரோன் தாக்குதலில் சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

Source : BBC
Pics : AlJazeera

கருத்துரையிடுக

புதியது பழையவை