உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2021

 


இலங்கை நிகழ்வுகள்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.

பங்களாதேஷினால் 150 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட்டது.

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் ஆடவர்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். அத்துடன் ஆடவர்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.  

உலக நிகழ்வுகள்

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக தலிபான் தளபதி அப்துல்லாஹ் கானி அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14 இலிருந்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறத் தொடங்கிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து  ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப்படை ஆகஸ்ட்  31 உடன் முழுவதுமாக வெளியேறியது.

மூன்று பிள்ளைகளைப் பெறுவதற்கான அனுமதி சீனாவில் உத்தியோகபூர்வமாக சட்டமாக்கப்பட்டது. 

மலேஷியாவின் பிரதமராக இஸ்மாயில் ஸப்ரி யாக்கோப் பதவியேற்றார்.மலேஷியாவின் பிரதமர் முஹ்யித்தீன் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்த நிலையிலேயே இந்த பதவியேற்பு இடம் பெற்றுள்ளது.

மியன்மாரின் இடைக்கால பிரதமராக Min Aung Hlaing பதவியேற்றார். கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற புரட்சிக்குப் பின்னர் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த அரச நிர்வாக கவுன்சிலின் State Administration Council (SAC) தலைவராக இவர் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைஸி பதவியேற்றார். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹஸன் ரோஹானியைத் தோற்கடித்து 62 சதவீத வாக்குகளை இவர் பெற்றார்.. இப்ராஹித் ரைஸி  2019 மார்ச்சிலிருந்து ஈரானின் பிரதம நீதிபதியாகக் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஹெய்டியில் ஏற்பட்ட 7.2 அளவிலான நில நடுக்கத்தினால் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 12000 பேரளவில் காயமடைந்தனர்.  

இத்தாலியின் Sicily பிரதேசத்தில் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. 

இந்திய வீராங்கணை சிந்து இவ்வருட ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பட்மின்டன் போட்டியில் வெண்கலத்தை வென்றார். கடந்த 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களைப் பெற்ற இந்திய பெண் வரிசையில் முதலாவதாக இவர் உள்ளார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள் பின்வருமாறு ..

01. அமெரிக்கா 39 

02. சீனா 38 தங்கப்பதக்கங்கள்

03. ஜப்பான் 27 தங்கப்பதக்கங்கள் 

 www.ulahavalam.com



கருத்துரையிடுக

புதியது பழையவை