கூகுளுக்கு பிரான்ஸினால் தண்டப் பணம் விதிப்பு

    இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.


செய்தி முகவர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் கூகுள் நடக்கவில்லை என்பதனால்  இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

    விதிக்கப்பட்டுள்ள 592 அமெரிக்க மில்லியன் டொலர்களை கூகுள் இரண்டு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் நாளொன்றுக்கு1.1 அமெரிக்க மில்லியன் டொலர்களை மேலதிகமாக செலுத்த வேண்டி வரும். 

    எனினும் கூகுள் நிறுவனமானது, தாம் முறையாகவே நடந்து கொண்டதாகவும் தண்டம் விதிக்கப்பட்டமையானது ஒப்பந்தத்தை தாம் அடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை புறக்கணிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Pic : Google.com

கருத்துரையிடுக

புதியது பழையவை