சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு முதன்முறையாக மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட விண்கலமொன்றை அனுப்பியுள்ளது.
![]() |
சீனாவின் விண்கலம் shenzhou 12 |
சீனாவின் விண்வெளி நிலையமான tiangong2 பூமியின் மேற்பரப்பிலிருந்து 340KM - 450 KM உயரத்தில் பூமியை சுற்றி வருகின்றது. இந்த விண்வெளி நிலையத்திற்கே மூன்று விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்..
![]() |
புறப்படுவதற்கு முன்னர் மூன்று விண்வெளி வீரர்களும் |
![]() |
சீனாவின் விண்வெளி நிலையம் |
உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் தொடர்பாடல் கருவிகள் உள்ளடங்கிய தனித்தனி தங்குமிடங்கள் இவர்கள் மூவருக்குமாக சீன விண்வெளி நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் இரண்டு முறை விண்வெளியில் நடக்கவுமுள்ளனர்.(02 Spacewalks) இதன் போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி உடையினையும் (Spacewalks Suits) இவர்கள் அணியவுள்ளனர்.