உலகின் வயதான நபர்

 உலகின் வயதான நபராக Puerto Rico வைச் சேர்ந்த Emilio Flores Márquez என்பவர் கின்னஸில் இடம் பிடித்துள்ளார். 1908-08-08 அன்று பிறந்த இவருக்கு தற்போது 112 வயதாகும்.சிறு வயதிலிருந்து கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். 



குடும்பத்தில் முதலாவது ஆண் பிள்ளையாக இருந்ததனால் தன்னுடைய சகோதரர்களை கவனித்துக் கொள்ளும் பணியிலும்  ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி கடந்த 2010 இல் மரணமடைந்துள்ளார். 


இவருக்கு ஐந்து பேரப் பிள்ளைகளும் ஐந்து கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். இவரது பிள்ளைகள் நான்கு பேரில் இருவர் உயிருடன் உள்ளனர். 


படங்கள்

https://www.guinnessworldrecords.com/news/2021/6/emilio-flores-marquez-confirmed-as-the-worlds-oldest-man-living-at-112-665641

கருத்துரையிடுக

புதியது பழையவை