புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனும் புதிய அரசியல் கட்சி முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டது.
மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப்படத் தளபதி ரொசான் குணதிலக நியமனம் செய்யப்பட்டார்.
டோக்கியோவில் இவ்வருடம் நடபெற இருந்த 32 ஆவது ஒலிம்பிக் போட்டி 2021 இற்கு ஒத்தி வக்கப்பட்டது. ( கொரோனா காரணமாக)
லக்ஸம்பேர்க் நாடு பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.
மலேசியாவின் பிரதமராக முஹதீன் யாசின் பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் பிரதமர் மஹதீர் முஹம்மதின் இராஜினாமாவத் தொடர்ந்தே இவர் பிரதமராக பதவி யேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார நிறுவனம் கொவிட் 19 ஐ Pandemic ஆக அறிவித்தது.
ஈராக்கின் பிரதமராக அத்னான் அல் சுர்பி நியமிக்கப்பட்டார்.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியிலிருந்து முதலில் விலகிய நாடாக கனடா காணப்படுகிறது.
ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை நாட்டின் முதலாவது தனிமப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டது.
இவ்வருடம் பிம்ஸ்டக் (Bimstec) மாநாடு (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு) இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட்து.