உலக நிகழ்வுகள் நவம்பர் 2019

தெற்கு அதிவேகப் பாதையின் பரவகும்புக்க தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான வீதி திறந்து வைக்கப்பட்டது. 

முப்படைகளின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. இது பத்தரமுல்லையின் அக்குரேகொட வில் அமைந்துள்ளது. 

ஐநா அமைதிகாக்கும் சேவைக்காக243 இராணுவ வீரர்கள் மாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

8 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்ச வெற்றிபெற்றார். கோதபாய ராஜபக்ச நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் வரிசையில் ஏழாவது ஜனாதிபதியாவார். 

முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன 88 ஆவது வயதில் காலமானார். 

ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார். 

இலங்கையின் 23 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டார்.

உலகக்கிண்ண ரக்பி தொடரில் ரஷ்யா தென்னாபிரிக்கா சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் விருப்பத்தை அமெரிக்கா ஐநாவுக்கு அறிவித்தது. 

பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொறலஸ் தனது பதவியை இராஜிநாமா செய்தார். இதனை அடுத்து எதிர்க்கட்சித் உறுப்பினர் அலெக்ஸ் தன்னைத் தானே பிரதமராக அறிவித்தார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை