உலக நிகழ்வுகள் ஒக்டோபர் 2019



இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் பெறுமதியை 39 ரூபாவாகக் குறைக்க வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்தது.
மாத்தறை மாவட்டத்தில் 170 ஹெக்டேயரில் கறுவா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
இலங்கை இராணுவம் தன்னடைய 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
அரச குடும்ப எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் சுவீடன் அரச குடும்பத்திலிருந்து 5 பேர் நீக்கப்பட்டனர்.
உலக டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வென்றதைத் தொடர்ந்து முதலிடத்திற்கு வந்துள்ளது.
2019 நோபல் பரிசுகள் :
சமாதானம் : அபிய் அகமட் ( எத்தியோப்பியாவின் பிரதமர்)
பௌதீகவியல் : ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கல் மேயர்,திதியர் க்யூலோஸ்
இரசாயனவியல் : ஜோன் பி குட் எனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம்,அகிரோ யோஷினோ
இலக்கியம் : பீட்டர் ஹேன்ட்கி
பொருளாதாரம் : அபிஜித் பேனர்ஜி,எஸ்டர் டபலோ, மைக்கல் கிரமர்
மருத்துவம் : வில்லியம் ஜி. கெலின், க்ரெக் எல். சமன்ஸா, பீட்டர் ஜெ. ரெட் க்ளிப்
ஐக்கிய இராச்சியம் மகாத்மா காந்தியின் 150 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நாணயமொன்றை வெளியிட தீர்மானித்தது.
புதிய வகை டைனோசர் வகை எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த டைனோசர்கள் Carcharodontosaurids இனத்தைச் சேர்ந்தவை. இவை Velociraptor எனப்படும் டைனோசர் இனத்தை விட 4 மடங்கு பெரியவை.
சனிக்கோளைச் சுற்றி வரும் 20 புதிய சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே சனியின் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.
ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியின் பாதிப்பினால் 66 பேரளவில் உயிரிழந்தனர்.
சவுதியின் பாதுகாப்பிற்காக 3000 துருப்புக்களை சவுதிக்கு அனுப்ப இருப்பதாக பென்டகன் அறிவித்தது.
கட்டலோன் சுதந்திரத்திற்கான செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரிவினைவாத தலைவர்கள் 12 பேருக்கு 13 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டணை வழங்கப்பட்டது,
தனது நாட்டில் தஞ்சமடைந்திருக்கும் சிரிய அகதிகள் திரும்புவதற்கான பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கவும் குர்திஷ் தலைமையிலான சிரிய படையை தனது எல்லையிலிருந்து வெளியேற்றவும் துருக்கி சிரியாவிற்குள் படையெடுத்தது.
துருக்கி மீது அமெரிக்க தடை விதித்ததோடு யுத்த நிறுத்தத்திற்கும் அமெரிக்காவால் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த யுத்த நிறுத்த அழைப்பை துருக்கி நிராகரித்தது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாத இறுதியில் பிரிட்டன் வெளியாகவிருந்த நிலையில் வெளியேறுவதற்கு எதிராக வட அயர்லாந்தில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்டோபர் 15
world Obesity Day October 11
உலக பெண் பிள்ளைகள் தினம் ஒக்டோபர் 11
புலம்பெயர் பறவைகள் தினம் ஒக்டோபர் 12

அரச நிறுவனங்களில் இடம் பெற்ற ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இவ்வருட ஜனவரி 22 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. இதன் பதவிக்காலம் ஜூலை 22 இல் முடிவடைந்தது. எனினும் செப்டம்பர் 30 வரை இதன் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. மீண்டும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

புதியது பழையவை