விமானப்படையின் 68 ஆவது நிறைவு நிகழ்வு ஹிங்குராங்கொடையில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடனை மேலும் ஒரு வருடமாக நீடித்தது. ( 3 வருடத்திலிருந்து 4 வருடங்கள்).
சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட தலைவர்களுக்கு சீனா விருதளித்து கௌரவித்தது. இதில் சீனாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் ஷானி கருணாரத்னவும் உள்ளடங்குகிறார்.
பங்களாதேசின் கடற்படைக் கப்பலான தலேஷ்வரி எனும் கப்பல் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்தது.
நோர்வே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் மெரியான் ஹேகன் இருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தார்.
இலங்கையின் 73 ஆவது வரவுசெலவுத்திட்டம் பாராளுவமன்றத்தில் 5 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மார்ச் 12 ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம் பெற்றது. வாக்கெடுப்பில் 119 வாக்குகள் ஆதரவாக கிடைத்தன.
பெண் பணியாளர் குழாமொன்றைக் கொண்ட இலங்கை விமானமொன்று சிங்கப்பூருக்கு பயணம் மேறகொண்டது.
சுவாமி விவேகானந்தரின் 125 ஆவது ஞாபகர்த்த நிகழ்வுகள் நடைபெற்றன.
ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்குபற்ற 5 பேர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன (தூதுக்குழு தலைவர்), கலாநிதி சரத் அமுனுகம பா.உ, கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநர், திரு. ரவிநாத் ஆரியசிங்க செயலாளர் – வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சு, மற்றும் திரு.ஏ.நெரின் புள்ளேஇ பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஆகியோரே இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். (இலங்கைக்கான ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.ஏல்.ஏ. அஸீஸ் பிரதி வதிவிடப் பிரதிநிதி சமன்த ஜயசூரிய)
மாலபே--புறக்கோட்டைக்குமிடையிலான இலகு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கைச்சாத்திடப்பட்டது.
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சு;ற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகருக்கு சென்றார்
மார்ச் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை திரிபீடகவாரம் கொண்டாடப்பட்டது. இது திரிபீடகவந்தனா எனப்படுகின்றது.
பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவர் பௌஸான் அன்வர் அவர்களுக்கு நட்புறவின் நட்சத்திரம் என்ற விருது பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸினால் வழங்கப்பட்டது. பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகின்ற தூதுவருக்கு இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப்பட்டது. இதில்
இலங்கைக்கு 130 ஆவது இடம் கிடைத்தது. முதல் இடத்தில் பின்லாந்து உள்ளது.
இலங்கைக்கு 130 ஆவது இடம் கிடைத்தது. முதல் இடத்தில் பின்லாந்து உள்ளது.
இலங்கையில் முதன் முறையாக செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது. மவுசாக்கலையில் இந்த மழை பெய்விக்கப்பட்டது. இதற்கு தாய்லாந்தின் பொறியியலாளர் குழுவொன்று பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதியமைச்சும் விமானப்படையும் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரபல சிங்கள பாடகி அஞ்சலீன் குணதிலக தனது 79 ஆவது வயதில் காலமானார்.
1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி காமினி திசாநாயக்க காலமானார். இவர் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவியாவார்.
எல்தோனியாவின் பொதுத் தேர்தலில் காஜா கல்லஸ் தலைமையில் போட்டியிட்ட மைய வலதுசாரி சீர்திருத்தக் கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் காஜா கல்லஸ் எல்தோனியாவின் முதல் பெண் பிரதமரானார்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை தாக்கிய சூறாவளியால் 23 பேர் கொல்லப்பட்டனர்.
இளம் வயதில் சம்பாதித்தவர் பட்டியலில் அமெரிக்க மொடலும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கைலி ஜென்னர் இடம்பிடித்தார்.
எதியோப்பியாவிலிருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு சென்ற போயிங் 737 MAX 8 விமானம் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 149 பயணிகள் 08 பணியாளர்கள் மரணமடைந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடன் வெளியேறும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் தீர்மானத்தை பிரித்தானிய பாராளுவமன்றம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடித்தது.
நியுஸிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச் நகரிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவ்ததில 57 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேரளவில் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 104 பேர் உயிரிழந்தனர்.
தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட இடாய் சூறாவளியினால் சிம்பாபே, மொஸாம்பிக், மாலாவி போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.மொசாம்பிக்கின் பெய்ரா நகரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ எட்டியது.
வாழ்வதற்கு அதிக செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் , ஹொங்கொங், பாரிஸ் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
சிரியாவின் பாகூஸ் கிராமத்தில் இருந்த ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியில் இருந்து அந்தக்குழு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்காவுக்கு ஆதரவான சிரிய ஜனநாயகப் படை அறிவித்தது.
உலகின் சிறந்த ஆசிரியராக கென்யாவைச் சேர்ந்த பீட்டர் டபிச்சி என்ற ஆசிரியர் தெரிவானார். வார்க்கி அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்பட்டது.
ULA. Rasmy
Teacher
Ho/Galagedara Muslim Vidyalaya, Padukka
Teacher
Ho/Galagedara Muslim Vidyalaya, Padukka