------------------------
சர்வதேச நடுவர் குமார் தர்ம சேனவுக்கு சிறந்த நடுவர் விருது கிடைத்துள்ளது. டேவிட் செப்பர்ட் விருது எனப்படும் இந்த விருதை இவர் இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது. மாலைதீவின் ஜனாதிபதி இப்றாஹிம் முஹம்மத் சொலிஹ் இதில் கலந்து கொண்டார்.
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பி.எம்.எஸ் சார்ல்ஸை மீண்டும் நியமிக்கும் தீர்மானம் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்டது. ஜனவரி மாதம் இறுதியில் இவர் இப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சுங்கத்திணைக்கள தொழிற்சங்கத்தினரால் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீச்சல் வீரர் ஜெரம் போலிங் காலமானார்.
தொழில் வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவால் பொலநறுவையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் மே மாதம் தாய்லாந்தின் பத்தாவது மன்னராக முடிசூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு அரச மரக்கன்றொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா இதனைக் கொண்டு சென்றார்.
களனி , சப்ரகமுவ, ரஜரட்டை பல்கலைக் கழகங்களுக்கு தொழில்நுட்ப பீடமும் சிறி ஜெயவர்தன பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமும் அமைப்பதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியது.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் தெற்கேயுள்ள மின்யா என்ற பிரதேசத்தில் டுனா எல் ஜெபல் என்ற இடத்தில் 50 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எகிப்தின் டூல்மிக் இன் காலப்பகுதியைச் சேர்ந்தது.
பின்லாந்தின் பனிச்சறுக்கு வீரர் Matti Nykanen காலமானார். இவர் நான்கு முறை ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கித் தலைவரின் பதவிக்கு அமெரிக்க கருவூலத் தலைவர் டேவிட் மல்பாஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார். உலக வங்கித்தலைவராகப் பதவி வகித்த ஜிம் யோங் கிம் கடந்த 14 ஆம் திகதி பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமின் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக 15 இலட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
சவூதி இளவரசி ரீமா பின்த் பன்தர் அல் சவுத் அமெரிக்காவுக்கான சவூதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.
ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 91 ஆவது அகாடமி அவார்ட்ஸ் என்ற பெயரில் இது நடைபெற்றது. 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த திரைப்படம் : க்ரீன் புக் (சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், உண்மைக்கதை ஆகிய 3 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தன.)
சிறந்த இயக்குனர் : அல்போன்சா குவாரன் ( ரோமா திரைப்படம்)
சிறந்த நடிகர் : ரொமி மலேக் (போமேனியன் ராப் சோடி திரைப்படம்)
சிறந்த குறும் ஆவணப்படம் : Period. End of Sentence.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் : ரோமா
சிறந்த திரைப்படம் : க்ரீன் புக் (சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகர், உண்மைக்கதை ஆகிய 3 விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தன.)
சிறந்த இயக்குனர் : அல்போன்சா குவாரன் ( ரோமா திரைப்படம்)
சிறந்த நடிகர் : ரொமி மலேக் (போமேனியன் ராப் சோடி திரைப்படம்)
சிறந்த குறும் ஆவணப்படம் : Period. End of Sentence.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் : ரோமா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது.
சாகோஸ் தீவுகள் மீதான கட்டுப்பாட்டை விடும் படி பிரித்தானியாவுக்கு ஐநா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் வியட்நாமில் சந்தித்தனர்.
நைஜீரிய ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி முஹம்மத் புஹாரி வெற்றி பெற்றார். 2015 இலிருந்து இவர் ஜனாதிபதியாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்குத
தொகுப்பு :
UL.அஹமத் றஸ்மி
ஆசிரியர்
ஹோ/கலகெதர முஸ்லிம் வித்தியாலயம், பாதுக்க.
UL.அஹமத் றஸ்மி
ஆசிரியர்
ஹோ/கலகெதர முஸ்லிம் வித்தியாலயம், பாதுக்க.