உலக நிகழ்வகள் ஜனவரி 2019


டிசம்பர் 31 இல் நடைபெற்ற பங்களாதேஸ் பொதுத் தேர்தலில் ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றிபெற்றது. இது 300 ஆசனங்களில் 288 ஆசனங்களை வென்றுள்ளது. 350 ஆசனங்கள் கொண்ட பங்களாதேஷ் பாராளுவமன்றத்தில் 50 ஆசனங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஸ் அணியின் ஒருநாள் அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸாவும் போட்டியிட்டு பாராளுவமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2018இல் அதிக ஓட்டம் எடுத்தவராக விராட் கோலி காணப்படுகிறார். மொத்தமாக அவர் 2653 ஓட்டங்க எடுத்திருக்கிறார்.
கொழும்புத் துறைமுகம் இதுவரை 7 மில்லியன் கொள்கலன்களை இறக்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டு முதலாவது கொள்கலன் செயற்பாடு இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
யுனெஸ்கோ நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் விலகியுள்ளன. 1984இலும் அமெரிக்கா இதிலிருந்து விலகி 2003 இல் மீண்டும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு இரு ஆட்சி முறை என்ற அடிப்படையில் சீனாவுடன் தாய்வான் இணையலாம் என்ற சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் கருத்தை தாய்வான் ஜனாதிபதிசைஇன் வென் நிராகரித்தார்.
பூமியிலிருந்து 6.5 பில்லியன் தொலைவிலுள்ள அல்டிமா துலே பனிக்கட்டி கிரகத்தை நாசாவின் நியு ஹொரைசன்ஸ் விண்கலம் கடந்துள்ளது. அதனுடைய படங்களையும் இது அனுப்பி வைத்துள்ளது. அல்டிமா துலே என்பது 31 கிலோமீறற்றர் நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பத்திரிகை சுதந்திர நிறுவனத்தின் அறிக்கையின் படி ஊடக சுதந்திரமுள்ள நாடுகள் வரிசையில் இலங்கை 131 ஆவது இடத்தைப் பெற்றது. கடந்த ஆண்டு இலங்கை 141 ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பூட்டான் 94 ஆம் இடத்தில் காணப்படுகிறது. இது தெற்காசிய நாடுகளில் முதன்மையானதாகக் காணப்படுகிறது.
சீனாவின் சேன்ஜ் 4 விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கியது. நிலவின் தென் துருவப்பகுதியில் உள்ள ஐட்கென் படுகையிலேயே இது தரையிறங்கியுள்ளது. இதற்கு முன் கடந்த இல் சீனாவின் சாங் இ–3 விண்கலம் நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த விண்கலம் பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளை எடுத்துச் சென்றது. அதில் பருத்தி விதைகள் தளிர் விட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கான ஆளுனர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணம் ஹிஸ்புல்லாஹ்
மேல் மாகாணம் அசாத் சாலி
மத்திய மாகாணம்
வடமத்திய மாகாணம் சரத் ஏக்கநாயக்க
வட மேல் மாகாணம் பேசல ஜயரத்ன பண்டார
மாத்தறைக்கும் பெலியத்தைக்கும் இடையிலான ரயில் பாதை நிர்மாணம் பூர்த்தி அடைந்தது. இந்தப் பாதையில் நடந்த வெள்ளோட்டத்தில் அமைச்சர் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்அர்ஜூன ரணதுங்க கலந்து கொண்டார்.
ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இலங்கை துடுப்பாட்ட வீரர் சாதனையை திசர பெரேரா பெற்றார். நியுஸிலாந்துடனான நடந்த ஒருநாள் போட்டியில் 13 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை புரிந்தார். 1996 இல் பாக்கிஸ்தானுக்கு எதிராக சனத் ஜெயசுரிய பெற்ற 11 சிக்ஸர்களே ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற சிக்ஸர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் சிறந்த கால்பந்து வீரருக்கான குளோப் கால்பந்து விருதை மூன்றாவது முறையாகவும் ஜூவண்ட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக் கொண்டார். இந்த விருதை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்கள் சங்கம் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
வட மாகாணம் சுரேன் ராகவன்
ஊவா மாகாணம் கீர்த்தி தென்னக்கோன்
சப்பிரகமுவ கலாநிதி தம்ம திஸாநாயக்க
மலேசியாவின் மன்னரான சுல்தான் 5 ஆவது முஹம்மத் முடி துறந்தார்.
கபொன் நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது.
பாராளுவமன்ற தெரிவுக் குழுவுக்கு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க,காமினி ஜயவிக்ரம பெரேரா, சஜித் பிரேமதாச, தலதா அத்துகோரள ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இதனால் இந்தக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜொன் உன் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
ICC இல் 105 ஆவது நாடாக அமெரிக்கா இணைந்து கொண்டது. கடந்த 2017 இல் அதன் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். இதுவரை இப்பதவியை வகித்த மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ இம்மாதம் முதல் வாரத்தில் ஓய்வு பெற்றுச் செல்வதை அடுத்தே இந்நியமன் வழங்கப்படுகிறது.
கொங்கோ ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் பெலிக்ஸ் ஷிஷ்கிடி வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் அறிவித்தது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கட்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. இது தமிழகத்தின் 33 ஆவது மாவட்டமாகக் காணப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் டின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான 'Brexit' யோசனை தோற்கடிக்கப்பட்டது. பாராளுவமன்றத்தில் இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே யினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு 432 வாக்குகளில் 202 வாக்குகளே ஆதரவாகக் கிடைத்தன. அத்தோடு தெரேசா மேயிற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் அடுத்த வாரம் மாற்றுத் திட்டத்துடன் வருவதாக தெரேசா மே உறுதியளித்ததால் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
ஐக்கிய நாடுகளின் முழு அங்கத்துவத்தை பெற பலஸ்தீன் விண்ணப்பிக்க இருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிக்கி அறிவித்தார். கடந்த 2011 இலும் இவ்வாறு விண்ணப்பிக்க தயாராகிய போது அமெரிக்க வீட்டோ அதிகாரத்தைப் பாவிக்க இருப்பதாக அறிவித்ததையடுத்து அந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபைக்கு வரவில்லை.
பிரித்தானியாவின் டென்னிஸ் வீரர் அன்டி முர்ரே டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
கொழும்பு துறைமுக நகரில் மண் நிரப்பும் பணிகள் நிறைவுக்கு வந்தன. இந்த நகர் 269 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டது. மொத்த நிலப்பரப்பில் 91 ஹெக்டேயர் பொது நிலமாக அபிவிருத்தி செய்யப்படும். அரசாங்கத்திற்கு ஒதுக்கப்படும் நிலப்பகுதிய முதலீட்டாளர்களுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தெரேசா மே யிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தது. எதிராக 325 வாக்குகளும் ஆதரவாக 305 வாக்குகளும் கிடைத்தன.
ICC யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக மனு சவானி நியமிக்கப்பட்டார். எதிர்வரும் ஜூலையிலிருந்து உத்தியோகபூர்வமாக தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.
இலங்கைக்கு 435 மில்லியன் டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை ஜனாதிபதி சந்தித்த போதே இதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மின்தனாவோ பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கான தேர்தல் நடைபெற்றது.
மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவராக தன்னுடைய பணிகளை ஆரம்பித்தார்.
பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுவமன்றக் குழு (கோப்) வின் தலைவராக மீண்டும் பாராளுவமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் மொத்தமாக 16 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
அரச கணக்காய்வுக் குழுவின் (COPA-Committee on Public Accounts) தலைவராக லசந்த அழகியவன்ன தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் உரைநிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் செய்தார்.
கொழும்பு -_ காங்கேசன்துறைக்கிடையிலான உத்தர தேவி புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலேசியா மன்னராக கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மதுஇ தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே வழக்கத்திற்கு மாறாக கடந்த 6ஆம் பதவி விலகியதை அடுத்தே புதிய மன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் கடமையாற்றும் இலங்கை இராணுவ வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
தொகுப்பு :
UL. அஹமத் றஸ்மி
ஆசிரியர்
ஹோ/கலகெதர முஸ்லிம் வித்தியாலயம் , பாதுக்க

கருத்துரையிடுக

புதியது பழையவை