உலக நிகழ்வுகள் டிசம்பர் 2018


மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி உள்ளடங்கலாக 122 பாராளுவமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு டிசம்பர் 3 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தடை விதிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான தடைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். ( டிசம்பர் 04)
5 ஆம் திகதி கூடிய பாராளுவமன்றம் 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கபட்டது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத்தடை 08 ஆம் திகதிக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டது.(டிசம்பர்6) வழக்கு விசாரணையும் 7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 4 ஆம் திகதியிலிருந்து 3 நாட்களாக இடம் பெற்று வந்த விசாரணையையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை 12 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டது. (டிசம்பர் 07) வழக்கு விசாரணை அடுத்த நாள் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் 7ஆம் திகதி நிறைவு பெற்றன. தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை ‘தடை’ இருக்கும்.
புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கம் ஜனாதிபதியால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவை க்கு எதிரான குவோ வொரொன்டோ (Quo Warranto) ரிட் கட்டளை மனு மீதான விசாரணை 16-18 வரை விசாரணைக்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (1212ஃ2018)
டிசம்பர் 12 அன்று பாராளுவமன்றம் கூடியது. முன்னாள் பிரதமர் ரணிலுக்கு ஆதரவான பிரேரணை 117 வாக்குகளால் நிலைவேற்றப்பட்டது. சஜித் பிரேமதாஸவால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மனு மங்கள சமரவீரவால் வழிமொழியப்பட்டது. ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன ஆதரவாக வாக்களித்தன. மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 அன்றைய பாராளுவமன்ற அமர்வை பகிஷ்கரித்திருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவைக்கும் எதிரான தடையை தொடர்ந்தும் அமுல்படுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மீதான தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த போது உச்ச நீதிமன்றம் இதனை அறிவித்தது.
மஹிந்த ராஜபக்ச தன்னுடைய பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார். (டிசம்பர்15)
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார். (டிசம்பர் 16)
hராளுவமன்றம் 18 அன்று கூடிய போது எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டார். சபை முதல்வராக லக்ஷ்மன் கிரியெல்லவும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை பாராளுவமன்றத்தில் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பூமியிலிருந்து 1977 ஆம் ஆண்டு பயணத்தை ஆரம்பித்த வொயஜர் 2 விண்கலம் சூரிய மண்டலத்தைத் தாண்டியது.
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே யிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் வெற்றி பெற்றார்.
2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா கிரே முடிசூடப்பட்டார். 67 ஆவது முறையாக இந்தப் போட்டி நடைபெற்றது.
தமிழில் தந்தி அனுப்பும் முறையைக் கண்டு பிடித்த புலவர் அ. சிவலிங்கம் திருச்சியில் காலமானார்.
குரோசியா கால்பந்து வீரர் லூகா மொட்ரிச் பலோன் டி ஓர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
தொகுப்பு : அஹமத் றஸ்மி
ஆசிரியர்
ஹோ/கலகெதர முஸ்லிம் வித்தியாலயம்
பாதுக்க.

கருத்துரையிடுக

புதியது பழையவை