உலக நிகழ்வுகள் நவம்பர் 2018


இலங்கை நிகழ்வுகள்
புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டனர்.ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டனர்..( Mrs. Alaina Teplitz - ஐக்கிய அமெரிக்கா, Akira Sugiyama – ஜப்பான் , Eric Lavertu - பிரான்ஸ், Ashraf Haidari - ஆப்கானிஸ்தான் ) இவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.
பிரதமருக்கு உரிய அனைத்து வசதிகளையும் வழங்க சபாநாயகர் தயாராக இருப்பதாக திலங்க சுமதிபால வினால் அறிவிக்கப்ட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்நதரப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஜனாதிபதியை சந்தித்தார்.
பாராளுவமன்றம் நவம்பர் 14 முப 10.00 இற்கு கூடும் என்ற அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் உதய ஆர். செனவிரத்னவால் இந்த அறிவித்தல் வெளியாகியது. கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார்.
புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
06/11/2018 இங்கிலாந்துஇலங்கை 1ஆவது டெஸ்ட் ஆரம்பமானது. இது ரங்கன ஹேரத்தின் இறுதி டெஸ்ட் ஆகும்.
ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியாக ஹேமசிறி பெனாண்டோ நியமனம் செய்யப்பட்டார்.
மஹிந்த சமரசிங்க , கெகஹலிய ரம்புக்வெல்ல அரசாங்க பேச்சாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி பணிக்குழுவின் புதிய பிரதானியாக எச்.எம்.பி. ஹிட்டிசேகர ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டடார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டின் விக்கெட்டை ரங்கன ஹேரத் கைப்பற்றியபோது, அவர் காலி சர்வதேச அரங்கில் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 10 ஆம் திகதியுடன் பாராளுவமன்றம் கலைவதாக நவம்பர் 09 இல் அதி விசேட வர்த்தமானி வெளியாகியது. 30 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிலையில் பாராளுவமன்றம் கலைக்கப்பட்டது. ஜனவரி 05இல் தேர்தல் 17 இல் பாhhளுவமன்றம் கூடுதல் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2020 ஒகஸ்ட் 17 வரை ஆயட்காலம் உள்ள நிலையில் 21 மாதங்கள் முன்னதாக பாராளுவமன்றம் கலைக்கப்பட்டது.
கனிஸ்ட ஒலிம்பிக் பெட்மின்டன் சுற்றுப் போட்டியில் ஹஸினி நுஷாகா தங்கப்பதக்கம் வென்றார்.
ரங்கன ஹேரத் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 433 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுவமன்றம் கலைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 5 மனு தாக்கல் செய்யப்பட்டன.
பராளுவமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் பாராளுவமன்றம் கலைவது சம்மந்தமாக கடந்த 9 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு டிசம்பர் 07 வரை தடை உத்தரவை வழங்கியது. அத்துடன் இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து மனுக்களையும் டிசம்பர் 5ம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை விசாரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் ஏழாம் திகதி வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணையாளருக்கும் இடைக்கால தடையுத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
பண்டாஸ்டிக் போர், ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், இன்கிரடிபில் ஹல்க் போன்ற கேலிச்சித்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீ தன்னுடைய 95 ஆவது வயதில் காலமானார்.
14 ஆம் திகதி விசேட கட்சித்தலைவர்கள் மாநாடு சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாராளுவமன்றம் கூடியது. விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தார். அடுத்த நாள் 15 ம் திகதிக்கு பாராளுவமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
15 அன்று பாராளுவமன்றம் கூடியது. மஹிந்த ராஜபக்சவுடைய உரையைத் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டன. குறித்த உரையை அடுத்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவரது விசேட உரைக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாக அறிவித்ததோடு அதற்கான வாக்கெடுப்பை பெயர் கூறி மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையின் தீர்மானத்தை சபாநாயகர் கேட்டார்.
அதனைத் தொடர்ந்து பாராளுவமன்றத்தல் கை கலப்புக்கள் நடைபெற்றன.
கட்சித்தலைவர்களுடனான சபாநாயகரின் கூட்டத்தைத் தொடர்ந்து பாராளுவமன்றம் 16 ஆம்திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தாக்கிய கஜா புயல் யாழ்ப்பாணத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. 600 வீடுகள் சேதமைடைந்தன.
19ம்திகதி கூடிய பாராளுவமன்றம் 05 நிமிடங்கள் மாத்திரம் நடைபெற்றது. 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
23ம் திகதி காலையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் 12 பேர் கொண்ட பாராளுவமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
பாராளுவமன்றத் தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான முடிவு பாராளுவமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. ஆளும்தரப்பு வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நவம்பர் 27 , 29 திகதிகளில் பாராளுவமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுவமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பாக மனுக்களை விசாரிக்க சட்ட மா அதிபர் தலைமையில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் 07 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டது.
அசந்த டி மெல் கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவருமாவார்.
27 ஆம் திகதி கூடிய பாராளுவமன்ற அமர்வை ஆளுந்தரப்பு பகிஷ்கரித்தது.
29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுவமன்ற அமர்வையும் ஆளுந்தரப்பு பகிஷ்கரித்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
மொரகஹந்த களுகங்கை நீர்த்தேக்கத்தின் மொரகஹந்த அணைக்கட்டின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த அணைக்கட்டு மூலம் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது.
தேர்தல்கள் பணிப்பாளர் நாயகமாக எம்.எம். முஹம்மத் நியமிக்கப்பட்டார்.
இந்தோனேசியாவின் காணாமல் போன விமானமான லயன் ஏர் ஜேடி 610விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா நிறுவனத்தி;ன் 109 ஆவது மாநாடு பஹ்ரைனின் மனாமா நகரில் நடைபெற்றது.
ஈரானின் எண்ணை நிதித்துறை மீது அமெரிக்காவின் தடை அமுல்படுத்தப்பட்டது.
பஹ்ரைன் எதிர்க்கட்சித் தலைவர் ஷேய்க அலிசல்மான கட்டார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க இடைத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவியது. இதில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
ஜிசாட் 29 என்ற செயற்கைக் கோள் இந்தியாவின் ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2க ரொக்கட் மூலம் இது ஏவப்பட்டது.
இன்டர்போல் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தெரிவு செய்யப்பட்டார்.
ஜோர்ஜியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக சலோம் சுரபிஷ்விலி தேர்வு செய்யப்பட்டார்
நாசாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.(26நவம்பர்)
ICC யின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் அகில தனஞ்சய 13 ஆம் இடத்திற்கு சென்றார். நிரோசன் திக்வல்ல துடுப்பாட்டத்தில் 27 ஆம் இடம் பெற்றார். விராத் கோலிக்கு முதலாம் இடம் கிடைத்தது.
2020 இல் போர்முலா வன் போட்டி வியட்நாமில் நடைபெறவுள்ளது.
டென்டென்னிஸ் தரவரிசையில் சேர்பியாவின் ஜெக்கோவிச் முதலிடத்தைப் பிடித்தார்.8045 புள்ளிகள்
20இற்கு 20 போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை ரோஹித்த சர்மா பெற்றார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை