உலக நிகழ்வுகள் ஒக்டோபர் 2018


-----------------------------------------------------
இலங்கை
----------------
*:- வெள்ளைச் சீனியின் விலையாக 100 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
*:- 44ஆவது தேசிய விளையாட்டு விழா பொலனறுவையில் நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த போட்டிகள் 11.10.2018-14.10.2018 வரை நிகழ்வுகள் நடைபெற்றன.
*:- புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேராவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை முடிவு செய்து முடிவை ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*:- Ms British Empire 2018 அழகுராணிப் பட்டத்தை வைத்தியர் நுவந்திகா சிறிவர்த்தன பெற்றுக் கொண்டார்.
*:- காலி கலந்துரையாடல் 2018 எனப்படும் சமுத்திர பாதுகாப்பு மாநாடு இலங்கையில் நடைபெற்றது.
*:- என்டர்பிரைஸ் லங்கா கடன் திட்டம் தொடர்பில் முறைப்பாடுகள் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 1925 என்ற இலக்கம் அறிமுகப்படு;த்தப்பட்டது.
*:- 'தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற கட்சியை உருவாக்க உள்ளதாக வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அறிவித்தார்.
*:- இலங்கையின் ஜனாதிபதியாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் ;மாவட்ட பாராளுவமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். அரசாங்கத்திலிருந்து விலகுவதாக ஐ.ம.சு.கூ மத்திய குழு கூடி முடிவெடுத்து சபாநாயகரிடம் அறிவித்திருந்த நிலையிலேயே; இந்த பதவியேற்பு நிகழ்ந்தது. அதேவேளை, தானே பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். அத்தோடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக்க கலுவெவ நியமிக்கப்பட்டார். (27.10.2018)
*:- பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். (27.10.2018)
*:- பாராளுவமன்றத்தின் (இரண்டாவது) கூட்டத்தொடர் 27.10.2018 நண்பகல் 12.00 மணிக்கு நிறைவுக்கு வருவதாகவும் 16.11.2018 மு.ப 10.00 மணிக்கு பாராளுவமன்றம் மீண்டும் கூட இருப்பதாகவும். அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியமை மற்றும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமனம் செய்தமை தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
*:- அரச ஊடக நிறுவனங்களுக்கு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
ரூபவாஹினி - சட்டத்தரணி சரத் கோன்கஹகே
ஐவுNஇ ளுடுடீஊ - பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க
லேக்ஹவுஸ் - வசந்த ப்ரிய ராமநாயக்க(28.10.2018)
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் 12 பேரும் பிரதி அமைச்சர் ஒருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். (29.10.2018)
*:- தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது.
வெளிநாடு
*:- மேற்குக்கரையின் ஹெப்ரோனில் 31 யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியது.
*:- சிரியா , ஜோர்தானுக்கு இடையில் உள்ள நசீப் எல்லைக் கடவை திறக்கப்பட்டது. இது ஜபார் என்று ஜோர்தானியர்களால் அழைக்கப்படுகிறது.
*:- சீனாவையும் ஹொங்கொங்கையும் இணைக்கும் 56 கி.மீ நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறக்கப்பட்டது. இது சீன ஜனாதிபதி ஷீ ஜின்பியாங்கால் திறக்கபட்டது .
*:- சிறுகதையாளரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமி சென்னையில் காலமானார். ‘நீர்மை’ என்பது இவரது முக்கிய சிறுகதை நூலாகும்.
*:- 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வணிக கப்பல் ஒன்று கருங்கடலின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
*:- பிரேசில் ஜனாதிபதித் தேர்தலில் ஜெயிர் பொல்சொனாரோ வெற்றி பெற்றார்.
*:- பங்களாதேஸ் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவியுமான காலிதா ஷியாவுக்கு வழக்n;கான்ளில் 7ஆண்டுகள் ; தண்டணை அளிக்கப்பட்டது. மற்றுமொரு குற்றச்சாட்டு காரணமாக ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தண்டணையில் அவர் சிறையிலுள்ளார்.
*:- இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து பங்கா பெல்டுங் தீவை நோக்கி பயணித்த ஜே.டி 610 விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் மரணமடைந்தனர்.

விளையாட்டு
*:- இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆர்ஜண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான 2000 மீற்றர் பிரிவில் இலங்கையரான பாரமிவசந்தி மாரிஸ்டெல்லாஇ வெண்கலப் பதக்கம் வென்றார். இலங்கை 78 ஆவது இடம். 206 நாடுகள் பங்கு பற்றின.
*:- இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய பரா ஒலிம்பிக்கில் இலங்கை 4 தங்கம், 4 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களைப் பெற்றுக் கொண்டது.
*:- 386 இன்னிங்சில் 60 சதகங்கள் என்ற சாதனையை விராட் கோலி எட்டினார். 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டென்டுல்கர் இந்தப்பட்டியலில் சாதனை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*:- மேற்கிந்தியத்தீவுகள் அணி சகல துறை ஆட்டாக்காரரான ட்வயன் ப்ராவோ அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்த்hர்.
*:- மிக விரைவாக 10000 ஓட்டங்களை எடுத்தவர் என்ற சாதனையை விராட் கோலி நிலைநாட்டினார். விராட் கோலி 205 போட்டிகளில் 10000 ஓட்டங்கள் என்ற இந்த சாதனையை நிலைநாட்டினார். ஏற்கனவே 259 போட்டிகளில் 10000 ஓட்டங்கள் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பதிவுகளுக்கு முகநூலில் 'உலகவலம்' என்ற பக்கத்தை 'லைக்' செய்யுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை