இலங்கை நிகழ்வுகள்
-----------------------------
*=> அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்ட மூலமாக பாராளுவமன்றத்தில் பாராளுவமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.(05.09.2018)
*=>ஆசிய வலைப்பந்து போட்டியில் இலங்கையின் மகளிர் அணி சம்பியனானது. மொத்தமாக இலங்கை அணி 5 கிண்ணங்களை வென்றுள்ளது. (1989, 1997, 2001, 2009, 2018)
*=>ஐரோப்பிய ஒன்றியத்தால் துணிகளுக்கு விதிக்கப்படும் VAT வரி 15 வீதத்தில் இருந்து 05 வீதமாக குறைக்கப்பட்டது.
*=>21ஆவது இராணுவ பரா விளையாட்டு விழா தியகமவில் நடைபெற்றது.
*=>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதான Commandeur de la Legion D’Honneur விருது வழங்கப்பட்டது. பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வழங்கினார்
*=>பாராளுவமன்ற நிலையியற் கட்டளையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் பாராளுவமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுவமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. பா.உ விமல் வீரசன்சவுக்கு இரண்டு வாரங்களும் பா.உ பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களும் இந்த தடை விதிக்கப்பட்டது.
*=>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது. இதில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன விசேட உரையாற்றினார்.
உலக நிகழ்வுகள்
*=>4ஆவது சர்வதேச ஆயுள்வேத காங்கிரஸ் நெதர்லாந்தில் செப்டம்பர் 1இல் ஆரம்பமானது.
*=>ஜெபி சூறாவளி ஜப்பான், மரியானா தீவுகள், தாய்வானைத் தாக்கியது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
*=>பாக்கிஸ்தானின் ஜனாதிபதியாக ஆரிப் அல்வி பதவியேற்றுக் கொண்டார்.
*=>சர்வதேச பெண் முயற்சியாளர்கள் மாநாடு நேபாளத்தில் நடைபெற்றது.
*=>கடல் நீர் , கால நிலை போன்றவற்றை ஆராய்ச்சி செய்ய HY-1C எனப்படும் செயற்கைக் கோளை சீனா விண்வெளிக்கு ஏவியது. இந்த செயற்கைக் கோள் சமுத்திரங்களின் நிறம், தண்ணீரின் வெப்பநிலை போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவுள்ளது.
*=>52 ஆவது எழுத்தறிவு தினம் செப்டம்பர் 08 இல் கொண்டாடப்பட்டது.
*=>அனைத்துண்ணி சுறா இனம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
*=>அலிபாபா தலைமைப் பொறுப்பிலிருந்து அதன் நிறுவுனர் ஜெக் மா (Jack Ma) 2019இல் ஓய்வு பெறவுள்ளார். அலிபாபாவின் தற்போதைய CEO வான Daniel Zhang தலைமைப் பதவிக்கு செல்லவுள்ளார்.
*=>அமெரிக்க பகிரங்க கலப்பு இரட்டையர் போட்டியில் Bethanie Mattek- Sands, Jamie Murray ஆகியோர் கிண்ணம் வென்றனர்.
*=>உலக தற்கொலைக்கு எதிரான தினம் செப்டம்பர் 10 இல் கொண்டாடப்பட்டது. 2018இற்கான தொனிப்பொருள் தற்கொலையைத் தடுப்பதற்கு ஒன்றாக வேலை செய்வோம் என்பதாகும்.
*=>செப்டம்பர் 10-16 வரை நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் இராணுவ பயிற்சியை (MILEX) நேபாளம் புறக்கணித்தது. இந்தப் பயிற்சி இந்தியாவின் மகாராஷ்டிராவின் புனே இல் நடைபெற்றது.
*=>அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சேர்பியாவின் ஜெக்கோவிச் கிண்ணம் வென்றார். இது அவரது மூன்றாவது அமெரிக்கப் பகிரங்க போட்டியின் பதக்கமாகும். அத்துடன் இது அவரது 14 ஆவது கிரான்ட்ஸ்லாம் பதக்கமாகும்.
*=>அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒஸாக்கா ( Naomi Osaka)பதக்கம் வென்றார். கிரான்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்ற முதல் ஜப்பானியர் ஒஸாக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
*=>புளோரன்ஸ் சூறாவளி அமெரிக்காவின் தென்கிழக்குப் பிரதேசங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2018 இல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவாகிய பெரிய சூறாவளி புளோரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புயலின் காரணமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா அதிகமாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு 11 பேர் இந்த சூறாவளிக்குப் பலியாகியுள்ளனர்.
*=>செப்டம்பர் மாதத்திற்கான ICC யின் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதலாமிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
*=>ஜனநாயகத்திற்கான சர்வதேச தினம் செப்டம்பர் 15 இல் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் Democracy under Strain : Solution for Changinng World என்பதாகும்.
*=>மங்குட் சூறாவளி(Mangkhut) பிலிப்பைன்ஸ், தாய்வான், ஹொங்கொங்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
*=>ஐதரசனால் வலுவூட்டப்பட்ட ரயில் சேவையை ஜேர்மனி ஆரம்பித்தது.இந்த ரயிலின் பெயர் Coradia iLint train
*=>வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய தலைவர் மூன் ஜா இன் ஆகியோர் அணுச் சோதனையை நிறுத்துவது சம்மந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருவரும் வடகொரிய தலைநகரில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
*=>ஜப்பானின் MINERVA-II1 விண்கலம் வெற்றிகரமாக Ryugu குறுங்கோளில் தரையிறங்கியது.
*=>வியட்நாமின் ஜனாதிபதி Tran Dai Quang மரணமடைந்தார்.
*=>ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இந்தியா கிண்ணத்தை வென்றது. இது இந்தியாவின் 7 ஆவது ஆசியக் கிண்ண வெற்றியாகும். மேன் ஒப் வ மெச் Liton Das , தொடர் நாயகன் - Shikhar Dhawan
*=>பிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நிரந்தர தலைவராக நெய்மர் நியமிக்கப்பட்டார்.
*=>1440 ஆவது இஸ்லாமிய ஆண்டு ஆரம்பமானது.
*=>ஹங்கேரிக்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஐரோப்பிய பாராளுவமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
*=>கடந்த ஒகஸ்டில் குடிபோதையில் கார் ஓட்டியமை தொடர்பான வழக்கில் பிரான்ஸ் கால்பந்து அணித்தலைவர் ஹியுகோ லோரி ஸ்_க்கு 20 மாத போட்டித் தடை மற்றும் 7000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது.
*=>மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் அல் ரசாக் கைது செய்யப்பட்டார். அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமொன்றில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார்.
*=>ஜப்பானின் பிரதமர் ஷின்சு அபே அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஜப்பானின் பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை இவர் பெறுகின்றார்.
*=>ஊழல் குற்றச்சாட்டில் பத்து ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மேன்முறையீடு செய்ததை அடுத்து பாக்கிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. இவர்கள் ஏற்கனவே இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*=>மாலைதீவின் ஜனாதிபதியாக இப்றாகிம் முஹம்மட் சொலி தெரிவுசெய்யப்பட்டார். இவர் மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இவர் பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
*=>பீபாவின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற விருதை குரோஷிய அணித் தலைவர் லூகா மொட்ரிச் பெற்றார். 2018 உலகக்கிண்ணத் தொடரில் தங்கக் கால்பந்து இவருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேசிலைச் சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது.