::: உள்நாடு :::
*. எம்.பீ.சீ.ஏ இரசாயனப் பொருள் கலந்துள்ளமையால் இலங்கைத் தேயிலைக்கு ஜப்பானில் தடை விதிக்கப்பட்டது. இறக்குமதி செய்த தேயிலையை இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் ஜப்பான் தீர்மானித்தது.
*. உலகின் மிகப் பெரிய விமானமான ஏ. என் 225 மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புதல், ஊழியர்களின் ஓய்வு போன்றவற்றிற்காக இது தரையிறக்கப்பட்டது.
*. உலக யுத்தத்தின் போது ஜப்பானால் குண்டு வீச திருகோணமலைக் கடற்பகுதியில்
மூழ்கடிக்கப்பட்ட சகைன் எனப்படும் கப்பல் இலங்கைக் கடற்படையில் வெளியில்
எடுக்கப்பட்டு மீண்டும் மூழ்கடிக்கப்பட்டது.
*. ஊடக சுதந்திரமுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 131 ஆம் இடம் கிடைத்தது. முதலிடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் சுவிட்ஸர்லாந்தும் இடம்பெறுகின்றன.
*. இலங்கையின் இயக்குனரும் தயாரிப்பாளரும் கதையாசிரியருமான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தன்னுடைய 99 வயதில் காலமானார்.
*. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நம்பிக் கையில்லாப் பிரேரணை பாராளுவமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. (ஆதரவு 76 எதிர்ப்பு 122)
*. பாராளுவமன்றத்தின் கூட்டத்தொடர் ஜனாதிபதியால் ஒத்தி வைக்கப்பட்டது.
*. சுதந்திரக்கட்சியின் 06 உறுப்பினர்கள் பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுவமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது.
::: வெளிநாடு :::
*. உலகின் வயதான நபராக ஜப்பானின் 112 வயதான மஸஸோ நொனாகாவே கின்னஸ் சாதனை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். உலகின் வயதானவராகக் கருதப்பட்ட ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ நுனெஸ் ஒலிவேரா கடந்த பெப்ரவரியில் மரணமடைந்ததைத் தொடர்ந்தே மஸஸோ நொனாகாவே உலகின் வயதானவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
*. ஆட்சியதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனது தோழியுடன் ஊழலில் ஈடுபட்ட வழக்கில் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் ஹியுன் ஹே வுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
*. மான் வேட்டை தொடர்பாக சல்மான்கானுக்கு எதிராக 20 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளியாக தீர்ப்பு வெளியாகியது. இருந்தும் ஜோத்பூர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.
*. பப்புவா நியுக்கினியாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
*. சுவாஸிலாந்து நாட்டின் பெயர் ஈசுவாரினி என மாற்றப்பட்டது.
*. கியுபாவின் ஜனாதிபதியாக உப ஜனாதிபதியான மிகுயல் டயஸ் பதவியேற்றார். இவர் கியுபாவின் உப ஜனாதிபதியாக 5 வருடங்கள் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
*. மலேசியப் பாராளுவமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர் நஜீப் ரசாக்கினால் அறிவிக்கப்பட்டது.
*. பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூலா ட சில்வா பொலிசாரிடம் சரணடைந்தார்.
::: விளையாட்டு :::
*. லண்டனில் நடைபெற்ற 25 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அவுஸ்திரேலியா அதிக பதக்கங்களைப் பெற்று முன்னிலை பெற்றது. பதக்க விபரங்கள் வருமாறு
தங்கம் வெள்ளி வெண்கலம்
அவுஸ்திரேலியா 80, 59, 59
இங்கிலாந்து 45, 45, 46
இந்தியா 26, 20, 20
இலங்கைக்கு 31 ஆம் இடம் கிடைத்தது. வெள்ளிப்பதக்கமொன்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
வெள்ளி – பளு தூக்கல் - இந்திக்க திசாநாயக்க
இலங்கையின் அஞ்சலோட்டக் குழு 6 ஆம் இடத்தைப் பெற்றது. 39.08 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்தது.
*. சர்வதேச கிரிக்கட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசகராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டார்.
facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com