கடந்த 12.11.2017 அன்று ஞாயிற்றுக் கிழமை ஈரானிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசத்தில் ஈரானின் கெர்மன்சே என்ற பிரதேசத்தில் 7.3 ரிச்டர் அளவிலான புவியதிர்ச்சி ஏற்பட்டது. இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 445 பேர் இதில் கொல்லப்பட்டதோடு 7000 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் , துருக்கி, ஐக்கிய அறபு இராச்சியம் ஆகிய நாடுகளிலும் பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
துருக்கி 92 மீட்புப்பணியாளர்களை அனுப்பியுள்ளதோடு இத்தாலி நிவாரணப்பொருட்களையும் அனுப்பியுள்ளது. ஐஊசுஊ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் நேசக்கரம் நீட்டியுள்ளன.
Tags:
அனர்த்தங்கள்