செப்டம்பர் 2016 உலக நிகழ்வுகள் சுருக்கமாக..

செப்டம்பர் 2016 உலக நிகழ்வுகள் சுருக்கமாக..
*. இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சிங்கப்பூர் பயணமாகினர்.
*. சிகா வைரஸ் தொடர்பாக இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
*. ஆட்பதிவுத் திணைக்களம் பத்தரமுல்லையிலுள்ள ' சுஹ+றுபாய ' கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
*. 28 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா முடிவுகள்
முதலாமிடம் கம்பஹா மாவட்டம் 130 புள்ளிகள்
இரண்டாமிடம் கொழும்பு 102 புள்ளிகள்
மூன்றாமிடம் கண்டி 100 புள்ளிகள்
*. கிளிண்டன் பூகோள மையத்தின் வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன விசேட அழைப்பாளராகக் கலந்து கொண்டார். ' சமநிலையைக் கடந்து நிலையான அபிவிருத்திக்காக பெண்களுடைய வலுவைப் பாதுகாத்தல்' என்பது இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
*. ஐ.நா சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் கூடியது.
ரஷ்யாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் விளாடிமிர் புட்டினின் கட்சி வெற்றி பெற்றது.
*. நடைபெற்று முடிந்த 15 ஆவது பரா ஒலிம்பிக் போட்டி முடிவுகள்
முதலாமிடம் - சீனா - 239 பதக்கங்கள்
இரண்டாமிடம் - இங்கிலாந்து - 64 பதக்கங்கள்
மூன்றாமிடம் - உக்ரைன் - 41 பதக்கங்கள்

கருத்துரையிடுக

புதியது பழையவை