ஜூன் 2016 உலக நிகழ்வுகள்

ஜூன் 2016 உலக நிகழ்வுகள்
இலங்கை நிகழ்வுகள்
*. கொஸ்கம சாலாவ பிரதேச இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு ஐந்து பேர் காயமடைந்தனர்.
*. ஜே.வி.பி யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்.
*. இலங்கை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
*. தகவலறியும் சட்ட மூலம் திருத்தங்களுடன் பாராளுவமன்றத்தில் நிறைவேறியது.
*. இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவச் சிலை யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
உலக நிகழ்வுகள்
*. பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதை தீர்மானிக்கும் சர்வசன வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த வெளியேற வேண்டுமென 52% மானோர் வாக்களித்தனர்.
*. உலகில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை சுவிட்ஸர்லாந்தில் திறந்து வைக்கப்பட்டது. இது காட் தர்ட் பேஸ் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
*. சுவாசக் கோளாறு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி மரணடைந்தார்.
*. ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது அமர்வு ஆரம்பமாகியது.
ulahavalam.blogspot.com

கருத்துரையிடுக

புதியது பழையவை