மார்ச் 2016 உலக நிகழ்வுகள்

*. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓர் ஆண்டு காலம் தங்கியிருந்த ஸ்கொட் கெல்லி ( அமெரிக்கா), மிகைல் கொர்னியன்கோ (ரஷ்யா) ஆகியோர் பூமிக்குத் திரும்பினர்.
*. மியன்மாரின் ஜனாதிபதியாக ஹதீன் கயாவ் தெரிவு செய்யப்பட்டார். 2015 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. எனினும் சூகியினால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியாத நிலை காணப்பட்டது. அவரின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பதனால் இந்த நிலை ஏற்பட்டது. ஹதீன் கயாவ் ஜனாதிபதி தெரிவுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இரு சபைகளைக் கொண்ட பாராளுவமன்றத்தில் 652 வாக்குகளில் 360 வாக்குகளைப் பெற்றார்.
*. நியுசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மார்டின் குரோவ் காலமானார்.
*. நெதர்லாந்து கால்பந்தாட்ட வீரர் ஜோஹன் மரணமடைந்தார்.
*. ஆசியாக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் பங்களாதேசை வீழ்த்தி இந்தியா சம்பியனானது.
*. டி 20 கிறிக்கட் போட்டி ஆரம்பமானது. இதில் 16 அணிகள் பங்கு பற்றின. முதல் சுற்று , சுப்பர் 10 என இரு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது.
www.facebook.com/ulahavalam

கருத்துரையிடுக

புதியது பழையவை