பெப்ரவரி 2016 உலக நிகழ்வுகள்

*. மகிழ்ச்சி, சகிப்புத் தன்மைக்கான அமைச்சுக்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
*. வடக்கு இடிமுழக்கம் என்ற பெயரில் சவூதியில் இராணுவப் பயிற்சி நடைபெற்றது.
*. மத்திய ஆபிரிக்க குடியரசு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் போஸ்ரின் தோவாடெரா வெற்றி பெற்றார்.
*. உகண்டா ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி யொவேரி முஸெவெனி வெற்றி பெற்றார்.
*. கியுபா தலைநகர் ஹவானாவில் ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் உயர் போதகர் பட்ரியாக் கிரில்லும், கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர் பிரான்சிசும் சந்தித்தனர்.
*. 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இந்தியாவின் அசாம் தலைநகர் குவாத்தி மற்றும் மேகலயா தலைநகர் ஷில்லாங் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் 188 தங்கம் , 90 வெள்ளி , 30 வெண்கலம் உட்பட 308 பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடம் பெற்றது.
*. 25 தங்கம் 57 வெள்ளி , 89 வெண்கலம் உட்பட 171 பதக்கங்களைப் பெற்று இலங்கை இரண்டாமிடம் பெற்றது. இலங்கை சார்பாக 484 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
www.facebook.com/ulahavalam

கருத்துரையிடுக

புதியது பழையவை