ஜனவரி 2016 உலக நிகழ்வுகள்

*. சவூதி அரேபியா ஈரானுடனான இராஜ தந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. சவுதியின் முடியாட்சியை விமர்சித்த நிம்ர் அல் நிம்ரு என்ற ஷீயா மதகுரு தூக்கிலிடப்பட்டதையடுத்து ஈரானிலுள்ள சவுதி தூதரகம் பொதுமக்களால் தாக்கப்பட்டது. இதனையடுத்தே சவுதி ஈரானுடனான தனது தொடர்புகளை துண்டித்தது.
*. இஸ்ரேலுக்கான எகிப்தின் தூதுவராக ஹஸன் ஹைராத் என்பவர் நியமிக்கப்பட்டார்.
*. ஆவர்த்தன அட்டவனையின் 113, 115, 117, 118 ஆகிய இடங்களுக்கான மூலகங்கள் இணைக்கப்பட்டன.
*. புதிய வகை நீலக்கல் ஒன்று இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டது. 1404.49 கரட் எடை கொண்ட இது உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபயர் எனக்கருதப்படுகிறது.தாய்வானின் முதலாவது பெண் ஜனாதிபதியாக ' ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் தலைவியான 'தலாய் இன்க்' என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடனான ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதன் பிரதமராக பாயஸ் அல் சராஜ் என்பவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை