2015 ஜனவரி உலக நிகழ்வுகள்

*. பிரபஞ்ச அழகிப் போட்டியில் கொலம்பியாவின் பாலினா வேகா பட்டம் வென்றார்.
*. கிரேக்க பொதுத் தேர்தலில் இடது சாரிக் கட்சியான சிரிசா 149 ஆசனங்களைப் பெற்றது.
*. யெமனில் ~pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் பிரதமரின் தலைமை அதிகாரியை கடத்தியதோடு பிரதமர் மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை கைப்பற்றினர்.
*. 2004 பி எல் 85 விண்கல் பூமிக்க அருகாக பயணம் செய்தது.
*. இங்கிலாந்து திருச்சபையின் முதல் பெண் ஆயராக லிபி லாயன் பதவியேற்றார்.
*. உலக பேரழிவு கடிகாரம் 2 நிமிடங்களால் முன் நகர்த்தப்பட்டது. இக்கடிகாரம் தற்போது 11.57 PM ஐக் காட்டுகின்றது. அது நள்ளிரவை அடைய 3 நிமிடங்களே உள்ளன.
*. லித்துவேனியா யூரோ வலயத்தின் 19 ஆவது நாடாக இணைந்தது. யூரோ நாணயத்தையும் ஏற்றுக் கொண்டது.
*. பிரான்ஸின் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது.
*. சவூதி மன்னர் அப்துல்லாஹ் தன்னுடைய 90 வயதில் மரணமடைந்தார். அடுத்த மன்னராக சல்மான் பதவியேற்றார்.
*. சாம்பியா ஜனாதிபதி தேர்தலில் எட்கார் லுங்கு வெற்றி பெற்றார்.
*. சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வாவ்ரிங்கா சம்பியனானார்.
*. உலகின் மிகச்சிறந்த வீரருக்கான பலோன் டிஒ விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ ( போர்த்துக்கல்) வென்றார்.
*. மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்காவின் APD வில்லியர்ஸ் அதிவேக சதத்தைப் பெற்றார். 31 பந்துகளில் இந்த சதத்தைப் பெற்றார்.
இலங்கை நிகழ்வுகள்
*. வடக்கிற்கான புகையிரத சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது.
*. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டு 51.28 % வாக்குகளைப் பெற்ற மைத்திரிபால சிறிசேன இலங்கையின் 7 ஆவது (நிறைவேற்றதிகாரம் கொண்டோர் வரிசையில் 6 ஆவது) ஜனாதிபதியாகத் தெரிவானார். 27 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டதோடு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டதோடு நிறுவனங்கள் சிலவற்றின் தலைவர்களும் மாற்றப்பட்டனர். மாகாணங்களுக்கான ஆளுநர்களும் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிய பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டார்.
*. புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது ஜோசப் வாஸ் அடிகளார் பாப்பரசரால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்ட அவர் பிலிப்பைன்சுக்கு விஜயம் மேற்கொண்டார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை