செப்டம்பர் 2015 நிகழ்வுகள்

*.இலங்கைப் பாராளுவமன்றத்தின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டார். 8 ஆவது பாராளுவமன்றத்தின் முதல் அமர்வின் போதே இத்தெரிவு இடம் பெற்றது.
*. ஐ.நா பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
*.ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.

*.ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது.
*.சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் கட்சி வெற்றி பெற்றது. இது தேர்தலில் 83 ஆசனங்களைப் பெற்றது.
*.அவுஸ்திரேலியாவின் 29 ஆவது பிரதமராக முன்னாள் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் மல்கம் டேர்ன்பல் பதவியேற்றார். லிபரல் கட்சித் தலைமைத்துவ போட்டியில் டோனி அபொட் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே இவர் பதவியேற்றுள்ளார்.
*.புனித பாப்பரஸர் பிரான்ஸிஸ் கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொண்டார். அமெரிக்கா பாராளுவமன்றத்திலும் இவர் உரையாற்றினார்.
*.கிரேக்க பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான சிறிஸா கட்சி வெற்றி பெற்றது.
புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவ் அங்கீகாரமளித்தார்.
*.2022இல் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடாத்தும் நகராக தென்னாபிரிக்காவின் டர்பன் நகர் தெரிவுசெய்யப்பட்டது. போட்டி நகரைத் தெரிவு செய்யும் போட்டியிலிருந்து கனடாவின் எட்யோன்டன் நகர் விலகிக் கொண்டதையடுத்து டர்பன் நகர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டது.
*.அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி ஆட்டத்தில் சேர்பியாவின் ஜேகோவிச் சம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் பிளாவியா பென்னட்டா சம்பியன் பட்டம் வென்றார்.
facebook.com/ulahavalam

கருத்துரையிடுக

புதியது பழையவை