நவம்பர் 2015 உலக நிகழ்வுகள்

*. அஸர்பைஜான் பாராளுவமன்ற தேர்தலில் ஆளும் புதிய அஸர்பைஜான் கட்சி வெற்றி பெற்றது. மொத்த ஆசனங்கள் 125 இல் இக்கட்சி 70 ஆசனங்களைப் பெற்றது.
*. துருக்கி பாராளுவமன்ற தேர்தலில் பிரதமர் எர்டோகானின் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி 49.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. பாராளுவமன்ற ஆசனங்கள் 550 இல் 316 ஆசனங்களை இக்கட்சி பெற்றது. கடந்த ஜுன் மாதத்தில் நடந்த பாராளுவமன்ற தேர்தலில் இக்கட்சி பெரும்பான்மையைப் பெறவில்லை. கூட்டமைப்பு அரசாங்கத்தையும் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையிலேயே மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் இக்கட்சி வெற்றி பெற்றது.
*. ருமேனியாவின் பிரதமராக டேசியன் சியலோ (Dacian Ciolo) பதவியேற்றார். 32 பேரைப் பலி கொண்ட இரவு நேர விடுதி தீ விபத்தினையடுத்து பிரதமர் விக்டர் டொன்டா இராஜினாமா செய்த பின்பே இப்பதவியேற்பு நடந்துள்ளது.
*. சர்வதேச அழகு ராணியாக வெனிசூலாவைச் சேர்ந்த எடிமர் மார்ரினெஸ் தெரிவு செய்யப்பட்டார்.
*. சீனா பிரதமர் ஷீ ஜின்பிங் மற்றும் தாய்வான் பிரதமர் மா யிங் ஜியோ ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளின் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
*. எபோலா அற்ற நாடாக சியாரோ லியோன் உலக சுகாதார நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.
*. மியன்மார் பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகி தலைமையிலான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது.
*. ஆசிய பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம் பெற்றது.
*. ஆர்ஜன்டீனா ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாத கட்சியைச் சேர்ந்த மௌரியோ மக்ரி 51.5 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
*. பாப்பரசர் பிரான்ஸின் ஆபிரிக்காவுக்கான விஜயம் இடம் பெற்றது.
*. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் ஆரம்பித்தது.
*. நியுசிலாந்து ரக்பி அணியின் தலைவரான ரிச்சி மெக்கோ தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
*.ATP World Tour இல் சம்பியன் பட்டத்தை நோவாக் ஜெகோவிச் பெற்றார்.
*. உலக டெஸ்ட் வரலாற்றில் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட்கள் கொண்ட போட்டியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு நடைபெற்றது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் லோவல் மைதானத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியில் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்பட்டது.
இலங்கை நிகழ்வுகள்:
*. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கான 04 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். இலங்கை தாய்லாந்து இராஜதந்திர தொடர்புகளின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூத் சான் ஷாவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விஜயத்தில் தாய்லாந்து பிரதமர், முடிக்குரிய இளவரசி சக்ரி சிரின்டோன் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தி;த்ததோடு தாய்லாந்து இலங்கை வர்த்தக பேரவை மாநாட்டிலும் கலந்து கொண்டார். மஹியங்கனை ரஜமஹ விகாரையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட புத்தரின் புனித சின்னங்கள் அடங்கிய கண்காட்சியும் தாய்லாந்து புத்தமந்தன் விஹாரையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
*. இலங்கை திரைப்படத் தயாரிப்பாளரும் , தொழிலதிபரும் , சமூக சேவகியுமான சோமா எதிரிசிங்க தன்னுடைய 76 வயதில் காலமானார்.
*. சட்ட ஒழுங்கு அமைச்சு சாகல ரத்நாயக்கவுக்கும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு டி.எம் சுவாமிநாதனுக்கும் வழங்கப்பட்டது. மேற்படி அமைச்சுகளுக்குப் பொறுப்பான திலக் மாரப்பனவின் இராஜினாமைவையடுத்தே இவ்வமைச்சுக்கள் மேற்படி இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
*. இல்லாதோருக்கு உதவும் நாடுகள் பட்டியலில் இலங்கை 08 ஆம் இடத்திற்கு பட்டியலிடப்பட்டது.
*. உலக சபீட்சக் குறிகாட்டியில் 142 நாடுகள் கொண்ட பட்டியலில் இலங்கைக்கு 61 ம் இடம் கிடைத்தது. தெற்காசிய பிராந்திய நாடுகளில் இலங்கை 1ம் இடத்தைப் பெறுகிறது.
*. 03 ஆவது இளைஞர் பாராளுவமன்ற தேர்தல் நடைபெற்றது. 160 தொகுதிகளுக்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் 225 பேர் தெரிவு செய்யப்பட்டனர் 334 பிரதேச செயலகங்களில் இத்தேர்தல் நடைபெற்றது.
*. ஜனாதிபதியின் அந்தரங்க செயலாளராக ஏ.என்.ஆர் அமரதுங்க நியமிக்கப்பட்டார். ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த பாலித்த பெல்பொல்ல பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்தே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
*. கோட்டே சிறி நாக விகாரையின் விகாராதிபதியும் , நீதி நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் 73 வயதில் சிங்கப்பூரில் வைத்து காலமானார். இவருடைய இறுதிக்கிரியைகள் இடம் பெற்ற 12ம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது.
*. 27 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் 160 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் சம்பியனானது.
*. பின்வரும் ஆணைக்குழுக்கான தலைவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணைக்குழு – மஹிந்த தேசப்பிரிய.
உறுப்பினர்கள் - நளின் அபேசேகர, ரத்ன ஜீவன் ஹ{ல்
எல்லை நிர்ணய ஆணைக்குழு- டி. கனகரத்தினம்
நிதி ஆணைக்குழு - யு. பலிகக்கார
கொள்முதல் ஆணைக்குழு – ஏ.எம். பொன்சேகா
*. 300 சர்வசே ஒரு நாள் போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய சாதனையை ரஞ்சன் மடுகல்ல பெற்றார்.
*. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவர் இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டார்.
*. மகாத்மா காந்தி சர்வதேச மத்திய நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.இந்நிலையம் இந்தியாவின் நிதியுதவியுடன் 88 மில்லியன் செலவில் மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
facebook.com/ulahavalam

கருத்துரையிடுக

புதியது பழையவை