*. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க்
பிராந்தியங்களில் ஜனாதிபதி மற்றும் நாடாளுவமன்ற தேர்தல்கள் நடைபெற்றன.
*. அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்றது.
குடியரசுக் கட்சியின் செனட் சபைத் தலைவர் மிட்ச் மக்கொன்னஸ் சபைக்கு தலைமை
தாங்கவுள்ளார்.*.ஜி 20 மாநாடு அவுஸ்திரேலியாவின் பிரிஸ்டேன் நகரில் நடைபெற்றது.
*. ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் மாநாடு பீஜிங்கில் நடைபெற்றது.
*. ரோஸெட்டோ செய்மதியின் மூலம் அனுப்பப்பட்ட பிலே விண்கலம் 67ஃபி சுர்யுமொவ் ஜெரஸிமென்கோ வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியது.
*. நேபாளத்தில் சார்க் உச்சி மாநாடு நடைபெற்றது,
*. ஆசியான் நாடுகளின் 25ஆவது உச்சி மாநாடு மியன்மாரின் நைப்பியிதோவில் ஆரம்பித்தது.
*. சீன் அபொட் வீசிய பவுன்ஸர் பந்து தலையில் பட்டதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலியாவின் பிலிப் ஹியுஸ் மரணமடைந்தார். n~பீல்ட் ~Pல்ட் தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியு சவுத் வேல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போதே இந்த சம்பவம் இடம் பெற்றது.
*. ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்ட சாதனையை இந்தியாவின் ரோஹித் சர்மா நிலைநாட்டினார். இலங்கைக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் 173 பந்துகளுக்கு 264 ஓட்டங்களைப் பெற்றே இந்த சாதனையை நிலைநாட்டினார். இதில் 33 Boundary கள் 9 Six ஆகியன அடங்கியுள்ளன.
இலங்கை
*. நவம்பர் 4 – நவம்பர் 10 விஞ்ஞான வாரமாக தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
*. பி.ஜி 38 என்ற பெயரிலான புதிய நெல் இனமொன்றை பதளகொட விவசாய நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நெல்லினம் 3 மாதங்களில் விளைவைத் தரக்கூடியது, உரப்பாவனையால் பாதிப்புறாதது. நோய்களுக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியது.
www.facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com