- இராணுவ சதிப்புரட்சிக்கு முயற்சி மேற்கொள்வதாக குற்றம் சாட்டி லெசதோ நாட்டு பிரதமர் தோமஸ் தபனே தென்னாபிரிக்காவில் தஞ்சமடைந்தார்.
- கின்னஸ் புத்தகத்தின் 60ஆம் பதிப்பு வெளியிடப்பட்டது.
- இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது. மங்கள்யான் விண்கலம் கடந்த வருடம் PSLV C 25 ரொக்கட் மூலம் விண்ணிற்கு ஏவப்பட்டிருந்தது.
- ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்டோர் பிரிவுக்கு எதிராக வாக்களித்தனர்.
- பிரபல மண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீநிவாஸ் தனது 45 வயதில் மரணமடைந்தார்.
- தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதவியேற்பு நிகழ்ந்துள்ளது
- ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஸ்ரப் கானியும் தலைமைச் செயல் அதிகாரியாக அப்துல்லா அப்துல்லாவும் பதவியேற்றுக் கொண்டனர்.
- ஐ.நா பொதுச் சபையின் 69 ஆவது கூட்டத்தொடர் நியுயோர்க்கில் ஆரம்பித்தது.
- 17ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவில் ஆரம்பமாகின.
- 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்ஸில் அறிவித்தது.
- சிம்பாபே கிறிக்கட் அணி அவுஸ்திரேலிய அணியை 31 வருடங்களின் பின் ஒரு நாள் போட்டியில் வென்றது.
- யு.எஸ் ஓப்பன் கலப்பு இரட்டையர் பிரிவில்; சானியா மிர்சா , புருனோ சோரஸ் ஆகியோர் சம்பியன் பட்டம் பெற்றனர்.
- யு.எஸ் ஓப்பன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மரின் கிளிக், மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சம்பியன் பட்டம் பெற்றனர்.
- அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் வ20 தலைவராக ஏரன் பின்ஞ் நியமிக்கப்பட்டார்.
- ஆசிய அரசியல் கட்சிகளின் 8 ஆவது பொது அமர்வு தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.
- ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற 150 பேரைக் கொண்ட இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்காவுக்கு சென்றது.
- சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்தார். நுரைச் சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் 2ம் 3ம் கட்டங்களை சீன ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததோடு. கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொண்டார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்பட்டன. 28 ஆண்டுகளின் பின் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும்.
லக்விஜய மின்நிலையத்தின் மூலம் 900 மெகா வோர்ட்ஸ் மின்சாரம் நாட்டின் மின்கட்டமைப்புக்கு வழங்கப்படுகிறது.
- பாராளுவமன்ற முன்னாள் செயலாளர் நாயகம் ஷாம் விஜேசிங்க தன்னுடைய 93 ஆம் வயதில் மரணமடைந்தார்.
- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
- சஹன அருண வாழ்வாதார கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1074 வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகள்(சமுர்த்தி வங்கி) மூலம் இத்திட்டம் செயற்படுகிறது.
- ஊவா மாகாண முதலமைச்சராக சசிந்திர ராஜபக்ச பதவியேற்றார்.