2014 ஆகஸ்ட் உலக நிகழ்வுகள்
*. எகிப்து புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை முன்மொழிந்ததையடுத்து 50 தினங்களாக நிலவி வந்த இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் முடிவுக்கு வந்தன.
எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கட்சியான “ சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி” யை நீதிமன்றம் தடைசெய்தது.
*. துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் 52% வாக்குகளைப் பெற்ற தையிப் எர்டோகன் வெற்றி பெற்றார்.
*. சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி சம்மந்தமான சர்வதேச மாநாடு கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற்றது.
*. பிரான்ஸ் பிரதமர் மனுவெல் வோல்ஸ் இராஜினாமா.
*. 20 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றன.
இங்கிலாந்து 58 தங்கம் உட்பட 174 பதக்கங்கள் பெற்று முதலாமிடம் பெற்றது. இலங்கை வெள்ளிப்பதக்கம் ஒன்றுடன் 29ம் இடத்தை பெற்றது.
62 கிலோ பிரிவில் 273 கிலோ எடையைத் தூக்கி சுதேஸ் பீரிஸ் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 21ஆவது பொது நலவாய விளையாட்டுப் போட்டிகள் 2018 அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும்.
*. குமார் சங்கக்கார அதிக தடவைகள் 150 இற்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் 3ம் இடத்தில் சேர் பிரெட்மனுடன் இணைந்தார்.இந்த வரிசையில் 1ம் இடத்தில் உள்ளவர் சச்சின் டெண்டுல்கராவார்..
*. மஹேல ஜயவர்தன தன்னுடைய இறுதி டெஸ்டில் விளையாடினார். பாக்கிஸ்தானுக்கெதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடந்த டெஸ்டே இவரது இறுதி டெஸ்டாகும்.1997-08-02 இந்தியாவுக்கு எதிரான டெஸ்டே இவரது முதல் டெஸ்டாகும். இதுவரை 149 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார்.
இலங்கை
*. மலையக எழுத்தாளர் சாரல் நாடன் காலமானார்.
தேயிலைத் தோட்ட அதிகாரியாக இருந்து கொண்டு சிறகதை, நாவல், ஆய்விலக்கியங்களைப் படைத்தவர்.
தேசபக்தன் கோ.நடேசய்யர், பத்திரிகையாசிரியர் கோ. நடேசய்யர் என்பன இவரது சாகித்திய விருது பெற்ற ஆக்கங்களாகும்.
*. இணையப் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் நடைபெற்றது.
*. திருகோணமலைபுறாத் தீவைப் பிரதிபலிக்கும் முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
*. புறக் கோட்டையில் மிதக்கும் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
*. BOC 75 வருட நிறைவைக் கொண்டாடியது.
*. பலஸ்தீனத்திற்கு இலங்கை 1 மில்லியன் டொலர்களை நிதியுதவி செய்தது.
facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com