2014 ஜூலை மாதஉலக நிகழ்வுகள்
*. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்தியாவின் பி.எஸ்.எஸ்.வி சி23 ரொக்கட் விண்ணிற்கு ஏவப்பட்டது
*. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்தியாவின் பி.எஸ்.எஸ்.வி சி23 ரொக்கட் விண்ணிற்கு ஏவப்பட்டது
*. பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக அமித்ஷா தெரிவு செய்யப்பட்டார்.
*. 20 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஆரம்பித்தது. பொதுநலவாய சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 71 நாடுகளைச் சேர்ந்த 6500 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.17 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
*. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர் நடினி கோர்டிமெர் தனது 90 வயதில் மரணமடைந்தார்.
*. பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு பிரேஸிலின் போர்ட்டலெஸா நகரில் நடைபெற்றது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் புதிய அபிவிருத்தி வங்கி , 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர கால ஒதுக்கீட்டு நிதியம் ஆகியன அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐந்து நாடுகளும் கைச்சாத்திட்டன.
*. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி ஆலிஸ் கோச் மேன் டேவிஸ் 90 வயதில் மரணமடைந்தார். 1948 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் உயரம் பாய்தலில் இவர் தங்கம் வென்றிருந்தார்.
*. 298 பேருடன் நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியாவின் கோலாம்பூர் பயணித்த MH 17 விமானம் உக்ரேன் வான் பரப்பில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது.
*. உக்ரேன் பிரதமர் அர்ஸெனி யட்ஸெனியக் பதவி விலகினார்.
*. இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் தொடர்ச்சியாக இஸ்ரேல் காசா மீது ஆரம்பத்தில் வான் தாக்குதல்களையும் பின்னர் தரைவழித் தாக்குதல்களையும் மேற்கொண்டது.ஹமாஸின் இலக்குகளே இலக்கு வைக்கபட்டதாக இஸ்ரேல் கூறினாலும் அதிகளவிலான பொதுமக்களே இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டனர். அத்தோடு வீடுகள், மருத்துவமனைகள், ஐ.நா பாடசாலைகள் என்பனவும் பாதிப்படைந்தன. பதிலடியாக ஹமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்ட போதிலும் இஸ்ரேலின் பாதுகாப்பு முறைமையான அயன் டோமின் காரணமாக அவை பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
*. எபோலா வைரஸின் தாக்கம் லைபீரியா, சியர்ரா லியோன், நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரமடைந்தது.
*. எபோலா வைரஸின் தாக்கம் லைபீரியா, சியர்ரா லியோன், நைஜீரியா போன்ற நாடுகளில் தீவிரமடைந்தது.
*. விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் கிண்ணத்தை சேர்பியாவின் நோவாக் ஜேகோவிச் 2 ஆவது தடவையாகக் கைப்பற்றினார். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் கிண்ணத்தை செக் குடியரசைச் சேர்ந்த பெட்ரா கிவிட்டோவா 2 ஆவது முறையாகக் கைப்பற்றிக் கொண்டார்.
*. பிரேஸிலின் மரகானா மைதானத்தில் நடைபெற்ற 20 ஆவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 1-0 அடிப்படையில் ஆர்ஜன்டீனாவை வெற்றி கொண்ட ஜேர்மனி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
குழுநிலைப் போட்டிகளில் ஜேர்மனி குழு G இல் விளையாடியிருந்தது.
ரவுண்ட் 16இல் அல்ஜீரியாவை 2-1 இல் வீழ்த்திய ஜேர்மனி காலிறுதிக்குள் நுழைந்தது.
காலிறுதியில் பிரான்ஸை 1-0 அடிப்படையில் வீழ்த்திய ஜேர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பிரேஸிலை 7-1 அடிப்படையில் வீழ்த்தி ஜேர்மனி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 1-0 அடிப்படையில் வென்று 20 உலகக் கிண்ண சம்பியனானது.
இறுதிப் போட்டியில் எந்தவொரு அணியும் கோல் போடவில்லை. பின்னர் வழங்கப்பட்ட மேலதித நேரத்தின் 113 ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் மரியா கோட்ஷே அடித்த கோல் ஜேர்மனியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
1986,1990 ஆகிய வருடங்களின் உலக உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகளிலும் ஏற்கனவே ஜேர்மனி, ஆர்ஜண்டீனா ஆகிய இரு அணிகளும் மோதியுள்ளன.
1986,1990 ஆகிய வருடங்களின் உலக உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகளிலும் ஏற்கனவே ஜேர்மனி, ஆர்ஜண்டீனா ஆகிய இரு அணிகளும் மோதியுள்ளன.
ஜேர்மனியின் தலைவர் -பிலிப் லாம்
பயிற்சியாளர் - ஜோகிம் லூ
கோல் காப்பாளர் மெனுவல் நெயுயர்
போட்டியை நடத்திய நாடான பிரேஸில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. பிரேஸிலில் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டம் நிகழ்வது 2 ஆவது முறையாகும். ஏற்கனவே 1950 இல் பிரேஸில் உலக உதைப்பந்தாட்டத்தை நடத்தியிருந்தது.
விருதுகள்:கோல்டன் பூட் :ஜேம்ஸ் ரொட்ரிகோஸ் (கொலம்பியா)(6 கோல்)
கோல்டன் போல் : லயனல் மெஸ்ஸி
சிறந்த அணி : கொலம்பியா
சிறந்த இளம் வீரர் : போல் போக்பா ( பிரான்ஸ்)
சிறந்த கோல் காப்பாளர் : மெனுவல் நெயுயர் ( ஜேர்மனி)
2014 உலகக் கிண்ண உதைப் பந்தாட்டத்தில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.
2018 இல் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெறும்.
*. உதைப்பந்தாட்ட நடப்புச் சம்பியன் ஜேர்மனியின் தலைவர் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
*. பிரேஸிலின் பயிற்றுவிப்பாளர் லீயுஸ் பெலிப் ஸ்கோலரி பதவி விலகினார்.
இலங்கை நிகழ்வுகள்..
*. சிறியளவிலான சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா 27 மில்லியன் உதவியை வழங்கியது.
*. இலங்கையின் 19 ஆவது கடற்படைத்தளபதியாக வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா பதவியேற்றார்.
*. ஆசிய கிரிக்கட் கவுன்ஸிலின் தலைவராக இலங்கைக் கிறிக்கட்டின் தலைவர் ஜயந்த தர்மதாஸ தெரிவுசெய்யப்பட்டார்.
*. தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியான சிறில் ராமபோஷ இலங்கை விஜயம் செய்தார்.
*. ரத்னதீப, மிஹிகந்த என்ற பெயரிலான இரண்டு கண்காணிப்புக் கப்பல்களை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்கியது.
*. 5 பில்லியன் முதலீட்டில் கார்கில்ஸ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
*. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 13 வகையான போட்டிகளில் இலங்கை வீரர்கள் 99 பேர் பங்கு பற்றுகின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் 5 பேர் பங்கு பற்றுகின்றனர்.
இலங்கை விளையாட்டு வீரர்களின் தலைவர் கே. அன்டன் சுதேஸ் பீரிஸ்.
ஆடவருக்கான 72 Kg எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கு பற்றிய சுதேஸ் பீரிஸ் 273Kg எடையைத் தூக்கி இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
*. இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளநராக பி. சமரசிறி நியமிக்கப்பட்டார்.
*. குருநாகல் மாவட்டத்தின் எஹெப்டுவௌ பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக 155KM நீளமான மின்சார வேலிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
www.facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com
www.facebook.com/ulahavalam
ulahavalam.blogspot.com