ஜூன் மாத உலக நிகழ்வுகள்
ulahavalam.blogspot.com
- இந்தியாவின் 29 ஆவது மாநிலமான தெலுங்கானா உதயமானது. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்படுவதற்கு ஜூலை 2013இல் காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்தது. கடந்த பெப்ரவரியில் தெலுங்கானா தனிமாநில மசோதா பாராளுவமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி முகர்ஜியின் ஆதரவும் பெறப்பட்டிருந்தது. லோக்சபா தேர்தலின் போது மாநில சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே தெலுங்கானா உதயமாகியது.
- எகிப்தில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி அப்துல்லா அல் சிசிவெற்றி பெற்றார். கடந்த வருடம் ஜூலையில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மட் முர்ஸிக்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்து இராணுவத்தளபதியான அல் சிசி முர்ஸியைப் பதவியிறக்கம் செய்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தன்னுடைய இராணுவத்தளபதி பதவியை இராஜிநாமா செய்த அல்சிசி 96.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
- சிரியா ஜனாதிபதியாக பஷர் அல் அஸாத் பதவியேற்றார்.
- உக்ரேன் ஜனாதிபதியாக பெட்ரோ போரோ ஷென்கோ பதவியேற்றார். தேர்தல் கடந்த மேயில் நடைபெற்றது.
- இஸ்ரேலின் ஜனாதிபதியாக ரியுவின் ரிவ்லின் பாராளுவமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டார்.
- G77 மாநாடு பொலிவியாவில் நடைபெற்றது.
- ஐநா மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் Zeid Al Hussein தெரிவு செய்யப்பட்டார். இவர் செப்டம்பரில் பதவியேற்கவுள்ளார்.
- சல்மான் ருஷ்டிக்கு பென் பின்டர் விருது வழங்கப்பட்டது. இலக்கிய பங்களிப்பு, கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தமை போன்றவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
- குண்டு துளைக்காத கவசங்களில் பயன்படுத்தப்படும் கவ்லர் என்ற நார்ப்பொருளை உருவாக்கிய ஸ்ரீபன் க்வொலக் தனது 90 வயதில் மரணமடைந்தார்.
- இஸ்ரேலின் மூன்று இளைஞர்கள் காணமல் போனதையடுத்து இஸ்ரேல் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்குக் கரையில் ஆரம்பித்தது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மேற்குக் கரையின் ஹமாஸ் தலைவர்கள் உட்படகிட்டத்தட்ட 350 பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதோடு, 5 பலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இறுதியில் மூன்று இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஹமாஸ் இயக்கமே இந்தக் கடத்தலைச் செய்ததாக இஸ்ரேலின் பிரதமர் பெஞசமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.
- ஈராக்கின் மௌசூல், பலூஜா மற்றும் திக்ரிட் ஆகிய நகரங்களைக் கைப்பற்றிய ISIS போராட்டக்குழு ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய அரசு என்ற பெயரில் ஆட்சியை ஆரம்பித்ததோடு அதன் கலீபாவாக அபூபக்கர் அல் பக்தாதி என்பவரையும் நியமித்தது.
- 7 ஆவது IPL இன் இறுதியாட்டத்தில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியனாகியது. கிங்ஸிலெவன் பஞ்சாப் அணியை 3 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சம்பியனாகியது.
- 20ஆவது உலக உதைப்பந்து போட்டிகள் பிரேசிலில் ஆரம்பமாகியது.64 போட்டிகள் நடைபெறுகின்றன. 32 அணிகள் 8 பிரிவுகளாக விளையாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் பங்குபற்றுகின்றன. போட்டிகளில் பிரசுகா எனும் உதைப்பந்து பயன்படுத்தப்படுகிறது. Free kick களில் Vanishing foam பயன்படுத்தப்படுகிறது.பந்து கோல் எல்லைக் கோட்டைத் தாண்டியதா என அறிய உதவும் கோல் லைன் தொழில்நுட்பம் (Goal Line Technology)பயன்படுத்தப்படுகிறது. உலக உதைப்பந்துப் போட்டிகளில் கோல் லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. பிரான்ஸ் கொண்டூரஸ் அணிகளின் போட்டிகளின் போது இது பயன்படுத்தப்பட்டது.
- பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் ரபேல் நடால் சம்பியன் கிண்ணத்தை வென்றார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
- சமாதானம் ஐக்கியத்திற்கான பொலிவியாவின் உயர் விருதான புளோரிநெஷனல் விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸினால் வழங்கப்பட்டது.
ulahavalam.blogspot.com