2014 மே மாத உலக நிகழ்வுகள்
மட்ரிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் > மரியா ஷரபோவா ஆகியோர் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.
அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் டைசன் கேயின் ஒலிம்பிக் பதக்கம் ஊக்கமருந்து குற்றச் சாட்டின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை நிகழ்வுகள்.
- இந்தியாவின் 15ஆவது பிரதமராக பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டார்.
- தாய்லாந்தில் பிரதமர் யிங்லுத் சினவத்ராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் யிங்லுத் சினவத்ராவை பதவி விலகுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவி விலகினார். இதனையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்த போன்சாங் என்பவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட சமரச நடவடிக்கைகள் தோல்வியடைந்ததையடுத்து இராணுவ சட்டத்தை அமுல்படுத்திய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
- பனாமா ஜனாதிபதித் தேர்தலில் துணை ஜனாதிபதி ஜூயன் கார்லோஸ் வரலோ வெற்றி பெற்றார்.
- முன்னாள் இந்தியக் குடியரசின் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்கொட்லாந்து ஏடன்பர்க் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
- ஆசியாவின் இடையீட்டுச் செயற்பாடு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான அமைப்பின் (Conference on Interaction and Confidence Building Measures in Asia – CICA)மாநாடு சீனாவின் சங்காய் எக்ஸ்போ நிலையத்தில் நடைபெற்றது.
- முன்னாள் போப்பாண்டவர்களான இரண்டாம் ஜோன்போல் , 23ம் ஜோன் ஆகியோரை பாப்பரசர் பிரான்சிஸ் புனிதர்களாக அறிவித்தார்.
- தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ஜகோப் சுமோ தலைமையிலான ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
மட்ரிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் > மரியா ஷரபோவா ஆகியோர் சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர்.
அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் டைசன் கேயின் ஒலிம்பிக் பதக்கம் ஊக்கமருந்து குற்றச் சாட்டின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது.
- அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான மாயா அஞ்சலு காலமானார்.
இலங்கை நிகழ்வுகள்.
- உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமானது. 2015ஆம் ஆண்டின் பின்னரான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களை பிரதானப்படுத்தல் எனும் தொனிப் பொருளில் இது நடைபெற்றது. உலக இளைஞர் மாநாடு முதன் முறையாக 1936 இல் நடைபெற்றது. இறுதியாக கடந்த 2010ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்றது.
- அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் கிடைத்தன.