2014 ஏப்ரல் மாத உலக நிகழ்வுகள்

2014 ஏப்ரல் மாத உலக நிகழ்வுகள்

  • நைஜீரியாவில் போஹோ ஹராம் என்ற அமைப்பு 200இற்கு மேற்பட்ட மாணவிகளைக் கடத்தியது.
  • தென்கொரியாவிலிருந்து Jeju தீவுக்கு 400க்கு மேற்பட்டோருடன் பயணித்த தென்கொரியக் கப்பல் கடலில் மூழ்கியது.
  • மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் சம்பியனானார்.


இலங்கை நிகழ்வுகள்

  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பஹ்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது ஜனாதிபதியவர்களுக்கு பஹ்ரைன் மன்னர் ஹமட் பின் இஸ்ஸா அல் கலீபா வினால் ‘கலீபா’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்களாக முறையே பிரசன்ன ரணதுங்க, ஷான் விஜய லால் டி சில்வா ஆகியோர்  பதவியேற்றனர். இம்மாகாணங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச்சில் நடைபெற்றது.
  • சமய செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க விசேட பொலிஸ் குழு ஆரம்பிக்கப்பட்டது.
  • இலங்கை உரக்கம்பனி தனது பொன்விழாவைக் கொண்டாடியது.
  • உலக சமாதான அமைப்பின் இலங்கைத் தூதுவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமில் நியமிக்கப்பட்டார்.
  • பங்களாதேஷின் ஸ்ரீ பங்களா தேசிய அரங்கில் (Sher e Bangla National Stadium ) நடைபெற்ற 5 ஆவது T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுக்ளால் வீழ்த்திய லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி சம்பியனாகியது. இப்போட்டியில் இலங்கை 134 ஓட்டங்களைப் பெற்றது.
  • இலங்கை T20 அணியின் தலைவராக லசித் மலிங்கவும், உபதலைவராக லஹிரு திருமான்னேவும் நியமிக்கப்பட்டனர். இலங்கை ஒருநாள் அணியின் தலைவராகவும் லஹிரு திருமான்னே நியமிக்கப்பட்டார்.
  • T20 போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
  • இலங்கை கிரிக்கட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டார். 
  • முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன் போட்டியில் பங்களாதேஷ் சம்பியனாகியது. இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 
  • சிறிலங்கா எயர்லைன்ஸ் OneWorld குழுமத்துடன் இணைந்தது. 



கருத்துரையிடுக

புதியது பழையவை