உலக நிகழ்வுகள்
- உக்ரைனிலிருந்து பிரிவதற்காக மக்களின் சம்மதத்தினை அறிவதற்கான பொது வாக்கெடுப்பு கிரிமியா நாடாளுவமன்றத்தினால் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக 97% வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் கிரிமியா உக்ரைனிலிருந்து பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதோடு ரஷ்யாவுடன் இணைந்து கொள்வதற்காகவும் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர் ரஷ்யா கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதனால் ஜி 8 நாடுகளிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டது.
- மலேசியாவிலிருந்து சீனா நோக்கிப் பயணமான 370 என்ற விமானம் காணாமல் போனது. அதனைத் தேடும் நடவடிக்கையில் பல நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் ஈடுபட்ட போதிலும் இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை.
- ஆசியக் கோப்பை கிரிக்கட் போட்டியில் இலங்கை சம்பியனாகியது.
- 'பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்களா விரிகுடாவின் வாயில்' எனப்படும் பிம்ஸ்டெக் அமைப்பின் மூன்றாவது அரச தலைவர்கள் மாநாடு மியன்மாரின் Nay Pyi Taw நகரில் நடைபெற்றது.
- 86 ஆவது ஒஸ்கார் விருது விழா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம் பெற்றது.
- சிறந்த திரைப்படம் :12 Years a slave
- சிறந்த இயக்குனர் : Alfonso Cuaron
- சிறந்த நடிகர் :Matthew McConaughey
- சிறந்த நடிகை : Catt Blanchett
இலங்கை நிகழ்வுகள்
- ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.
- பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மியன்மார் சென்றார்.
- தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை ' ஆங்கிலம் பேசும் பாடசாலை' எனும் நிகழ்ச்சித்திட்டத்திற்கூடாக ஆரம்பிக்கப்பட்டது.
- கிளிநொச்சி தொடக்கம் பளை வரையான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- மேல்மாகாணம், தென்மாகாணம் ஆகியவற்றிற்கான மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றது.