- சச்சின் டெண்டுல்கார் மற்றும் இந்திய விஞ்ஞானி சி. என். ஆர். ராவ் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
- இந்திய திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் காலமானார்.
- உக்ரைனில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அரசுத்தலைவர் யானுக்கோவிச் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
- WhatsApp ஐ Facebook வாங்கியது.
- நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் சுஷில் குமார் கொய்ராலா தெரிவு செய்யப்பட்டார்.
- மைக்ரோசொப்டின் புதிய தலைவராக இந்தியரான நாதெல்லா சத்யா நியமிக்கப்பட்டார்.
- 2014ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை
- தேசத்திற்கு மகுடம் கண்காட்சி குளியாப்பிட்டியவில் நடைபெற்றது.
- விமானப்படையின் 14 ஆவது தளபதியாக எயா மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்பட்டார்.