ஜூலை மாத நிகழ்வுகள்
- ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 ஆவது உறுப்பு நாடாக குரோஷியா இணைந்து கொண்டது.
- கணினி மௌசைக் கண்டுபிடித்த டக்ளஸ் கார்ல் ஜெல்பர்ட் தனது 88 வயதில் மரணமடைந்தார்.
- எகிப்திய இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக அட்லி மன்சூர் பதவியேற்றார்.
- ஜப்பானிய பாராளுவமன்ற மேல் சபைக்கான தேர்தலில் பிரதமர் ஷின்சு அபே வெற்றியடைந்தார்.
- பெல்ஜியத்தின் மன்னராக இளவரசர் பிலிப் பதவியேற்றார்.
- பூட்டானின் பாராளுவமன்றத்துக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
- 20 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டி இந்தியாவின் புனேயில் நடைபெற்றது. இப்போட்டியில் 27 பதக்கங்களைப் பெற்ற சீனா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது. 03 பதக்கங்களைப் பெற்ற இலங்கை பதக்கப் பட்டியலில் 14ம் இடத்தைப் பெற்றது.
- 08 ஆவது ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் மலேசியா சம்பியனாகியது. இதன் இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடியது.
- முத்தரப்பு இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் மஹேல ஜயவர்தன தன்னுடைய 400 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீர்ர் வரிசையில் இவர் மூன்றாமிடத்தைப் பெறுகிறார். முதலிரு இடங்களிலும் உள்ளவர்கள் முறையே சச்சின் டென்டுல்கர் மற்றும் சனத் ஜயசூரிய ஆவர்.
- முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்தியா சம்பியனாகியது.
- துருக்கியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான 19 ஆவது பீபா உலக்க்கிண்ண உதைப்பந்து தொடரில் பிரான்ஸ் சம்பியனானது.
- அவுஸ்திரேலியாவின் ஷேர்வோன் அனைத்து வித போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் சம்பியன் பட்டத்தை பிரிட்டனின் ஆண்டி மர்ரே வென்றார். மகளிர் சம்பியன் பட்டத்தை பிரான்ஸின் பார்த்தோலி வென்றார்.
- 2013 ம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா பிரிமியர் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.