- பூட்டான் பாராளுவமன்றத் தேர்தலின் முதல் சுற்று நடைபெற்றது.
- ஈரானின் ஜனாதிபதியாக ஹஸன் ரோஹானி தெரிவு செய்யப்பட்டார்.
- 39 ஆவது ஜி 8 மாநாடு அயர்லாந்தில் நடைபெற்றது.
- இந்திய வடமாநிலங்களில் கடும் மழை,வெள்ளம் ஏற்பட்டது.இதில் உத்தரப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
- உலகின் அதிவேக சுப்பர் கணினியை சீனா கண்டுபிடித்தது. இதன் பெயர் ரியன்ஹி 2.
- பலஸ்தீன பிரதமர் ரமிஹம்டல்லாஹ் இராஜினாமா செய்தார்.
- கட்டாரின் புதிய மன்னராக ஷெய்க் தமிம் பின் ஹமாட் அல்தானி பொறுப்பேற்றார். தனது தந்தை ஷெய்க் ஹமாட் பின் கலிபா அல் தானியிடமிருந்து மன்னர் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.
- மொங்கோலியா ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஸகியா மீண்டும் வெற்றி பெற்றார்.
- ஐ.சி.சி சம்பியன் போட்டிகள் வேல்ஸ்,இங்கிலாந்தில் நடைபெற்றன. இறுதியாட்டத்தில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்குபற்றின. இதில் இந்தியா சம்பியனானது.ஐ.சி.சி போட்டிகள் இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பிரென்ஞ் ஓப்பன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சம்பியனானார்.இது செரீனாவின் இரண்டாவது பிரென்ஞ் ஓப்பன் சம்பியன் பட்டமாகும்.ஆடவர் பிரிவில் ஸ்பெய்னின் ரபாயெல் நடால் சம்பியனானார்.
- இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கட் நடுவர் கே.ரி . பிரான்ஸிஸ் தனது 73 வயதில் காலமானார்.
- இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக உபாலி தர்மதாஸ பதவியேற்றார்.
- இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தாய்லாந்து ஜனாதிபதி இன்லக் ஷினவத்ரா (Yingluck Shinawatra)இலங்கைப் பாராளுவமன்றத்தில் உரையாற்றினார்.