- பாக்கிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மம்னூன் ஹஸன் வெற்றி பெற்றார்.
- ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரோஹானி பதவிப் பிரமாணம் செய்தார். இதற்குரிய தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது.
- மாலி ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் இப்ராஹிம் போபகர் கெயிடா வெற்றியடைந்தார்.
- சிம்பாபேயின் ஜனாதிபதியாக ரொபர்ட் முகாபே 7 ஆவது தடவையாக தெரிவு செய்யப்பட்டார்.
- டொமினிக் கடியரசின் இந்த ஆண்டுக்கான அழகுராணியாக யரிட்ஸா ரோயெஸ் தெரிவானார்.
- பிரபலமான ஆஷஷ் தொடரில் இங்கிலாந்து வெற்றியடைந்தது.
- 14 ஆவது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்றது. ரஷ்ய 17 பதக்கங்களை எடுத்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
இலங்கை
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெலாரஸிற்கு மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டார்.