2013 மே மாத உலக நிகழ்வுகள்...

மே மாதத்தில் நடந்த உலக நிகழ்வுகள்
  • பாக்கிஸ்தான் நாடாளுவமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சி வெற்றிபெற்றது. 272 இடங்களில் 122 இடங்களை இது பெற்றது. போதிய பெரும்பான்மை இடங்களைப் பெற 137 ஆசனங்களைப் பெற வேண்டும். சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் நவாஸ் ஷெரீபுடன் இணைந்ததால் போதிய பெரும்பான்மை கிடைத்தது.
  • பாக்கிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷர்ரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அத்தோடு அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டார்.
  • நெதர்லாந்தின் புதிய மன்னராக வில்லியம் அலெக்ஸாண்டர் பதவியேற்றார். அரசியான பியட்ரிக்ஸ் தன்னுடைய பதவியிலிருந்து இராஜினாமா செய்ததனைத் தொடர்ந்தே அவருடைய மகனான வில்லியம் அலெக்ஸாண்டர் மன்னராக பதவியேற்றுள்ளார்.
  • பங்களாதேஷின் முதற் பெண் சபாநாயகராக ஷிரின் ஷர்மின்  சவுத்ரி பதவியேற்றார்.
  • மலேசிய நாடாளுவமன்ற தேர்தலில் ஆளும் பாரிசான் தேசிய கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது.
  • மியன்மார் ஜனாதிபதி தெய்ன் சீன் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். 47 ஆண்டுகளுக்குப் பிறகு மியன்மார் ஜனாதிபதி ஒருவர் வெள்ளை மாளிகைக்கு செல்வது இதுவே முதன்முறையாகும்.
  • 2013ம் ஆண்டுக்கான மான்புக்கர் விருதினை அமெரிக்க எழுத்தாளர் லைடியா டாவிஸ் (Lydia Davis )பெற்றார்.
  • ஈக்குவடோர் நாட்டினுடைய பிகாசுங் என்ற செய்மதி ரஷ்ய விண்வெளிக் குப்பையுடன் மோதியது.
  • அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் வீசிய சூறாவளி பாதிப்புகளை ஏற்படுத்தியது.
  •  இத்தாலியின் பிரதமராக 7 தடவைகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் கியுலியோ அன்டிரோட்டி மரணமடைந்தார்.
  • இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பினால் (NSS) வொன் ஹெர் வான் பிரான் நினைவு விருது (Wernher von Braun Memorial Award) வழங்கப்பட்டது.
  • சீனப் பிரதமர் லீ கேக்கியாங் இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
  • பாடகர் டி.எம். சௌந்தராஜன் தனது 91 ஆவது வயதில் மரணமடைந்தார்.
  • ஐ.பி.எல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் சம்பியனாகியது. இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வெற்றி கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
  • ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்பொட் பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் சிறிசாந்த், அஜித் சண்லா, அங்கீட்ஈவான் ஆகிய வீரர்களும் ஏனைய சிலரும் கைது செய்யப்பட்டனர்.
  • சச்சின் டென்டுல்கர் ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
  • ஸ்பெய்னில் நடைபெற்ற மட்ரிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெய்ன் வீரர் நடால் சம்பியனாகினார். இறுதிப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ஸ்டனிஸ் லோஸ் வொரின்காவை 6-2, 6-4 நேர் செட் கணக்கில் தோற்கடித்து சம்பியனாகினார். மகளிர் பிரிவில் அமெரிக்க வீராங்கணை ஷெரீனா வில்லியம்ஸ் சம்பியனாகினார். இறுதிப் போட்டியில் மரியா ஷராபோவை 6-1, 6-4 செட் கணக்கில் தோற்கடித்து சம்பியனானார். ஷெரீனா வில்லியம்ஸின்  50ஆவது ஒற்றையர் சம்பியன் பட்டம் இதுவாகும்.
  • ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் (இத்தாலியன் ஓப்பன் டென்னிஸ்) ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சம்பியன் பட்டத்தை பெற்றார். இந்த சம்பியன் பட்டத்தை இவர் ஏழாவது முறையாக பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரரை 6-1, 6-3 செட் கணக்கில் தோற்கடித்து சம்பியனாகினார் . மகளிர் பிரிவில் சம்பியன் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் பெற்றார். இந்தப் பட்டத்தை இவர் நான்காவது முறையாக வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரன்காவை 6-1, 6-3 செட்கணக்கில் இவர் வென்றார்.
  • 2020 ஒலிம்பிக்கில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மல்யுத்தப் போட்டி மீண்டும் ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஸ்கொஷ், பேஸ்போல் ஆகிய போட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 
  • ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான மேற்கிந்திய அணியின் தலைவராக ட்வெய்ன் பிராவே (Dwayne Bravo )நியமிக்கப்பட்டார்.
  • பங்களாதேஷ் கிரிக்கட் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹ்மான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
  • ஒலிம்பிக் தங்கப்பதக்க படகோட்ட வீரர் அன்ரூ சிம்சன் அமெரிக்க கிண்ண போட்டிகளுக்கான பயிற்சியின் போது படகு கவிழ்ந்து மரணமடைந்தார்.


இலங்கை
  • தாய்லாந்து பிரதமர் யிங்க்லூத் சினவாத்ரா இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார். இவர் இலங்கைப் பாராளுவமன்றத்திலும் உரையாற்றினார்.
  • இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உகண்டாவுக்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டார். இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்தை உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் ஜனாதிபதி திறந்து வைத்த்தோடு பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மன்ற மாநாட்டிலும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சீனாவுக்கான 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பீஜிங்கில் நடைபெற்ற அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
  • சவூதிக்கான இலங்கையின் தூதுவராக வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.
  • வங்களாவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் ஏற்பட்ட புயல் இலங்கை இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்புயலுக்கு மகாசென் என்ற பெயர் வைக்கபட்டிருந்தது. மகாசென் என்ற பெயர் இலங்கை அரசர்களில் ஒருவரது பெயர் என்பதனால் இப்பெயர் வைத்தமைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் வளிமண்டலவியல் திணைக்களம் மன்னிப்பு கோரியது.
  • பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 75ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
  • மடுவிற்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக 43 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.
  • பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 11ஆவது விளையாட்டுப் போட்டியில் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் சம்பியனாகியது.
  • Asian Grand Prix மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றன. முதலாம் , இரண்டாம் கட்டங்கள் தாய்லாந்திலும் மூன்றாம் கட்டம் இலங்கையிலும் நடைபெற்றது. ஈட்டி எறிதல் போட்டியில் நதீக்கா லக்மாலியும், உயரம் பாய்தல் போட்டியில் மஞ்சுளா புஷ்பகுமாரவும் 800மீற்றர் ஓட்டப்போட்டியில் நிமாலியும் தங்கப்பதக்கம் வென்றனர். நதீகா லக்மாலி மூன்று கட்டங்களிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெள்ளி வெண்கலப் பதக்கங்களும் இலங்கைக்கு கிடைத்தன.




கருத்துரையிடுக

புதியது பழையவை