2013 ஏப்ரல் மாத நிகழ்வுகள்

  •  பிரித்தானிய முன்னாள் பிரதமர் மார்கிரட் தட்சர் தனது 87ஆவது வயதில் மரணமானார். பழமைவாத கட்சியைச் (Conservative Party)சேர்ந்த இவர் 3 தடவைகள் பிரித்தானியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர்.
  • வெனிசுவேலா ஜனாதிபதித் தேர்தலில் நிகொலஸ் மதுரோ50.7%வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹென்ரிக் கப்ரிலெஸ் 49.1%  வாக்குகளைப் பெற்றார்.
  • அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியின் போது இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. பிரஷர் குக்கர் மூலம் இந்தக் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இக்குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகளை பிடிக்கும் நடவடிக்கையின்போது தமர்லன் சார்னேய் என்பவர் கொல்லப்பட ஸோக்தார் சார்னேய் என்பவர் பிடிபட்டார். இவர்கள் இருவரும் செச்னியா வழி வம்சாவளி சகோதரர்களாவர்.
  • பங்களாதேஷ் ஜனாதிபதியாக முன்னாள் பாராளுவமன்ற தலைவர் அப்துல் ஹமீத் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
  • மலேசிய பாராளுவமன்றம் கலைக்கப்பட்டது.
  • லெபனானின் புதிய பிரதமராக தமாம் சலாம் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுவமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் 128 இற்கு 124 வாக்குகளை இவர் பெற்றிருந்தார்.
  • இத்தாலியின் பிரதமராக ஜனநாயக கட்சி தலைவர் என்ரிக்கோ லெத்தோ பதவியேற்றார்.
  • பங்களாதேஷில் ராணா பிளாசா என்ற கட்டடம் இடிந்து வீழ்ந்தது.
  • ஆறாவது ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பித்தன. 09 அணிகள் போட்டிகளில் பங்குபற்றுகின்றன. முதலாவது போட்டியில் டெல்லி டெயர் டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 06 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. 2012 இல் இடம் பெற்ற 05 ஆவது ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியனாகியிருந்தது.
  • ஐ.பி.எல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் குறைந்த பந்துகளில் சதமடித்தார். பெங்களூரில் புனே வோரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளுக்கு 175 ரன்கள் எடுத்து இந்த சாதனையை நிலைநாட்டினார். இதில் 17 சிக்ஸ் , 13 பவுண்டரி என்பன அடங்குகின்றன.
  • HSBC ஆசிய 5 நாடுகள் றக்பி முதலாம் பிரிவில் இலங்கை சம்பியனாகியுள்ளது.
  • இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட்டுக்கு பத்ம பூசணம் விருது வழங்கப்பட்டது.
  • இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவராக ஜயந்த தர்மபால செயலாளராக நிஷால் ரணதுங்க ஆகியோர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர்.
  • 2013ம் ஆண்டுக்கான உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
  • மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் 6 ஆவது முறையாகவும் சம்பியனாகி சாதனை படைத்துள்ளார். 4-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் மரியானா ஷரோபாவை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2002,2003,2004,2007,2008 ஆகிய ஆண்டுகளில் சம்பியனாகியுள்ளார்.
  • பீபாவின் கௌரவத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோ ஹவிலாஞ் பதவி விலகியுள்ளார். கால்பந்து தொடர்பான விடயங்களில் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியமையைத் தொடர்ந்தே இந்த பதவி விலகல் இடம் பெற்றது.
  • சீன போர்மூலா வன் க்ரேன்ட் ப்ரிக்ஸ் பந்தயத்தில் பெர்ராரி(ferrari) அணியின் பெர்னாண்டோ அலோன் ஸோ (Fernando Alonso) வென்றுள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை