2013 மார்ச் மாத நிகழ்வுகள்..

  • வெனிசுவேலாவை கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி ஜனாதிபதி ஹியுகோ சாவேஸ் தனது 58 வயதில் மரணமடைந்தார். சாவேஸின் உடல் கரகஸில் உள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வெனிசுவேiலாவின் இடைக்கால ஜனாதிபதியாக நிகொலஸ் மதுரோ பொறுப்பேற்றார்.

  • புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். எனவே அடுத்த பாப்பரசரைத் தெரிவு செய்வதற்காக நடந்த தேர்வில் ஆர்ஜென்டினாவின் கர்தினால் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ பாப்பரஸராக தெரிவு செய்யப்பட்டார். 115 பேர் கொண்ட கர்தினால் சபையினால் புனித சிஸ்ரின் தேவாலயத்தில் இத்தெரிவு நடைபெற்றது. இயேசு சபையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாப்பரசராகவும், கி.பி 741க்குப் பின்னர் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பாப்பரசராகவும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாப்பரசராகவும் இவர் காணப்படுகின்றார். பாப்பரஸரின் பிரான்சிஸின் உத்தியோகபூர்வ பதவியேற்பு வைபவம் ரோமிலுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் இடம் பெற்றது. பாப்பரசர் பிரான்ஸிஸ் 266ஆவது பாப்பரசராவார்.

  • கென்ய ஜனாதிபதித் தேர்தலில் உகுரு கென்யாட்டா 50.07% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ரைலா ஓடிங் என்பவராவார்.

  • மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட் கைது செய்யப்பட்டார்.

  • அமெரிக்க புலனாய்வுத் துறையின் தலைவராக ஜூலியா பியர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறைக்கு தலைமைப் பதவியேற்கும் முதற் பெண் இவராவார்.

  • சுவீடன் இளவரசி லில்லியன் 97 வயதில் மரணமடைந்தார்.

  • 2013 மிஸ் ரஷ்யாவாக Elaira Abdmzakora தெரிவு செய்யப்பட்டார்.

  • சிரிய கிளர்ச்சியாளர்களின் தலைவராக தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஹஸன் ஹிட்டோ தெரிவு செய்யப்பட்டார்.

  • 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இந்திய நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேனனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

  • பங்களாதேஷ் ஜனாதிபதி ஸில்லுர் ரஹ்மான் தனது 84 ஆவது வயதில் சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமானார்.

  • குவாட்டமாலாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் எப்ரைன் ரியோஸ் மொன்ட் இனப்படுகொலை சம்மந்தமான விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் 1771 மாயன் இனப்பழங்குடியினரின் படுகொலை சம்மந்தமாகவே இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

  • நேபாளத்தின் இடைக்கால அரசின் தலைவராக அந்நாட்டு உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் கில்ராஜ் ரெஜ்மி ( khil raj regmi )  நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ரஷ்யாவின் சொயுஸ் விண்கலம் தனது 144 தினங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் கழித்த பின் கஸகஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

  • தனது ஐந்து வருட பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த பாக்கிஸ்தான் பாராளுவமன்றம் கலைக்கப்பட்டது. இதன் இடைக்காலப் பிரதமராக (Hazar Khan Khoso) நியமிக்கப்பட்டார். தேர்தல் மே 11 இல் நடைபெறும்.

  • சீன ஜனாதிபதியாக ஜிஜின்பிங் அறிவிக்கப்பட்டார். சீன பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இவருக்கு ஆதரவாக 2,952 வாக்குகள் கிடைத்தன. எதிராக 1 வாக்கு போடப்பட்டது. இவர் இரசாயனவியலில் பட்டம் பெற்றவர். இவர் சீன  புரட்சியாளர்களில் ஒருவரான சி ஜோங்சுன்னின் மகனாவார்.

  • சீன பிரதமராக லிகிகுயாங் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு சீன பாராளுமன்றத்தில் 2,940 வாக்குகள் கிடைத்தன. இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சட்டத்தில் பட்டம் பெற்றவர்.

  • சைப்ரஸ் நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக அங்கேயுள்ள வங்கிகள் 2 வாரங்களாக மூடப்பட்டன. 

  • இந்திய நடிகை ராஜசுலோச்சனா தனது 77 வயதில் மரணமடைந்தார்.

  • இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியது.


விளையாட்டு நிகழ்வுகள்  
  • Laureus World Sports Award  வழங்கும் நிகழ்ச்சி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம் பெற்றது. ஆண்டின் உலகின் சிறந்த வீரராக உசேன் போலட்டும் சிறந்த வீராங்கனையாக ஜரிக்கா ஈனிஸ_ம் தெரிவு செய்யப்பட்டனர்.

  • ஆட்டநிர்ணயச்சதி தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக பங்களாதேசைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் நடுவர் நதீரஷாவுக்கு 10 வருடகாலத் தடைவிதிக்கபட்டது.

  • 20/20 இலங்கை அணியில் புதிதாக இணைக்கப்பட்டவர்கள்: ஷெஹான் ஜயசூரிய, சத்துரங்க டி சில்வா, ரமித் ரம்புக்வெல்ல, இஷான் ஜயரட்ண, ஏஞ்சலோ பெரேரா

  • இலங்கை ரக்பி ஒன்றியத்தின் தலைவராக அசங்க செனவிரத்ன மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  • இங்கிலாந்து நாட்டின் உதைப்பந்தாட்ட வீரர் மைக்கேல் ஓவன் (Michael James Owen) தனது ஓய்வை அறிவித்தார்.

  • நியுசிலாந்து கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெசி ரைடர் மதுபான சாலை ஒன்றில் நடந்த மோதல் சம்பவம் ஒன்றின் போது பலத்த காயமடைந்தார்.  கோமா நிலைக்குச் சென்ற இவர் பின்னர் நினைவு திரும்பினார்.

  • இலங்கையின் கிரிக்கட் வீரர் டிலான் சமரவீர சகல வித போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

  • அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4:0 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி டில்லியில் நடந்தது.
1st Test: இந்தியா 08 விக்கட்டுக்களால் வெற்றியடைந்தது. இதில் இந்திய அணித்தலைவர் தோனி இரட்டைச் சதம் அடித்தார்.( இந்த முதலாவது டெஸ்ட் பெப்ரவரியில் நடந்தது)
2nd Test: இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களால் வெற்றியடைந்தது.
3rd Test: இந்தியா 06 விக்கட்டுக்களால் வெற்றியடைந்தது.
4rthTest: இந்தியா 06 விக்கட்டுக்களால் வெற்றியடைந்தது.



  • பாக்கிஸ்தான் அணியின் தென்னாபிரிக்க கிரிக்கட் சுற்றுப் பயணம். 
03 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட், 02 போட்டிகளைக் கொண்ட T20, 05 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் போன்றவற்றில் விளையாடியது.

>>03 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பாக்கிஸ்தான் 3-0 என்ற அடிப்படையில் தோல்வியடைந்தது.(இது பெப்ரவரியில் நடந்தது)

>>02 போட்டிகளைக் கொண்ட T20 யில் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2ஆவது போட்டியில் பாக்கிஸ்தான் 95 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

>>05 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில்..
1st ODI: தென்னாபிரிக்கா 50 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை எடுத்தது. இதில் இங்ரம் சதமடித்தார். பாக்கிஸ்தான் 36.2 ஓவர் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா 125 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
2nd ODI: பாக்கிஸ்தான் 6 விக்கட்டுகளால் வெற்றியடைந்தது.
3rd ODI: தென்னாபிரிக்கா 34 ஓட்டங்களால் வெற்றியடைந்தது.
4th ODI: பாக்கிஸ்தான் 3 விக்கட்டுகளால் வெற்றியடைந்தது.
5th ODI: பாக்கிஸ்தான் 49.1 ஓவர்களில் 205 ஓட்டங்களை எடுத்து சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தென்னாபிரிக்கா 44 ஓட்டங்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களால் வெற்றியடைந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடரின் ஆட்ட நாயகனாகவும் எ.பீ. டி வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார். 3:2 என்ற கணக்கில் தொடரை தென்னாபிரிக்கா வெற்றி கொண்டது.

  • பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப் பயணம். 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ,மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டி,
ஒரு இருபதுக்கு 20 போட்டி என்பவற்றில் விளையாடியது.

>>டெஸ்ட் தொடர்
1st Test: காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. வெற்றி தோல்வியின்றி போட்டி நிறைவடைந்தது. முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 638 ஓட்டங்களைப் பெற்றது. இது இன்னிங்ஸ் ஒன்றில் பங்களாதேஷ் பெற்ற அதி கூடிய ஓட்டமாக காணப்படுகிறது. முஷ்பிகுர் ரஹீம் இரட்டைச் சதம் அடித்தார். லஹிரு திருமன்னே, சந்திமால், நசீர் ஹொசைன் ஆகியோர் தமது கன்னிச் சதத்தினைப் பூர்த்தி செய்தனர். ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்பிகுர்  ரஹீம் தெரிவு செய்யப்பட்டார். இந்த டெஸ்ட்டில் 08 சதங்கள் அடிக்கப்பட்டன.
2nd Test: போட்டி ஆர் . பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரங்கன ஹேரத் தனது 200 ஆவது விக்கட்டைப் பூர்த்தி செய்து , 200 விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்களில் மூன்றாமவராக வந்தார். இந்த டெஸ்;ட்டில் ரங்கன ஹேரத் 157 ஓட்டங்களுக்கு 12 விக்கட்டுக்களைவ Pழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

>>ODI
1st ODI: பங்களாதேஸ் 8 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
2nd ODI: மழை காரணமாக கைவிடப்பட்டது.
3rd ODI: பங்களாதேஸ் 3 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

>>T20
இலங்கை 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இலங்கை நிகழ்வுகள்
  • இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. மத்தள விமானநிலையம் திறந்து வைக்கப்பட்ட நாளான மார்ச் 18 சிவில் விமான சேவைகள் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

  • 7ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அம்பாறையில் நடந்தது. ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் இக்கண்காட்சி நடந்தது. அடுத்த கண்காட்சி குருநாகலில் நடைபெறும்.

  • சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

  • இலங்கையின் பிரபல எழுத்தாளரும் மொழியியலாளருமான சுச்சிரித்த கம்லத் காலமானார். ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் போன்றவற்றில் எழுதப்பட்டிருந்த நூல்களை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து சிங்கள இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய ஒருவர். ஆங்கில சிங்கள அகராதியை வடிவமைத்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

  • இலங்கையின் மூன்றாவது நீளமான பாலமான மட்டக்களப்பு கல்லடிப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

  • ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 25 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன. பிரேரணைக்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. 08 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

  • சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜனதாஸ பீரிஸ் காலமானர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், லேக் ஹவுஸ் என்பவற்றின் தலைவராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலப்பகுதியில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவராகவும் காணப்பட்டவர். 2004இல்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக தேசியப்பட்டியல் பாராளுவமன்ற உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

  • பாக்கிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக Maj. Gen. (R) Qasim Qureshi நியமிக்கப்பட்டார்.



கருத்துரையிடுக

புதியது பழையவை